பக்கம் எண் :

802 திருமுறைத்தலங்கள்


     “கூகா வென என்கிளை கூடியழப்
     போகாவகை மெய்ப்பொருள் பேசியவா
     நாகாசல வேலவ நாலுகவித்
     தியாகா சுரலோக சிகாமணியே.” (கந்தர் அநுபூதி)

   “சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
    வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளிக்
    காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
    சாந்துணைப் போதும் மறவாதவர்க்கொடு தாழ்வில்லையே.”
                                          (கந். அலங்)

     “தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
     வை வைத்த வேற்படை வானவனே மறவேன் உனையான்
     ஐவர்க்(கு) இடம்பெறக் காலிரண்டு ஒட்டி அதிலிரண்டு
     கை வைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.” (”)

     “மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
     மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
     சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
     நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.” (”)

                   திருப்புகழ்

     அன்பாக வந்து உன்றாள் பணிந்து
          ஐம்பூத மொன்ற நினையாமல்
     அன்பால் மிகுந்து தஞ்சாரு கண்க
          ளம்போருகங்கள் முலைதானும்
     கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
          கொண்டாடுகின்றன குழலாரைக்
     கொண்டே நினைந்து மன்பேதுமண்டி
          குன்றா மலைந்து அலைவேனோ
     மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
          வம்பார் கடம்பை யணிவோனே
     வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
          வம்பே தொலைந்த வடிவேலா
     சென்றே யிடங்கள் கந்தா எனும் பொ
          செஞ்சேவல் கொண்டு வரவேணும்
     செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
          செங்கோட மர்ந்த பெருமாளே.