பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 803


                                        -“செம்மையுடன்
     அங்குன்றா தோங்கும் அணிகொள் கொடிமாடச்
     செங்குன்றூர் வாழுஞ்சஞ்சீவியே.”         (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     அ/மி. அர்த்தாநாரீஸ்வரர் திருக்கோயில்
     திருச்செங்கோடு 637211 நாமக்கல் மாவட்டம்.

263/5. வெஞ்சமாக்கூடல்

வெஞ்சமாங்கூடலூர்

     கொங்கு நாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் வெஞ்சமாங்கூடல், வெஞ்சமாங்கூடலூர் (Venjaman
Gudalore) என வழங்குகிறது.

     1. கரூர் - அரவக்குறிச்சி சாலையில் 13 கி.மீ. சென்று, சீத்தப்பட்டி (அ)
ஆறுரோடு பிரிவில் 8 கி.மீ. செல்ல வேண்டும்.
     2. கரூர்- ஆற்றுமேடு நகரப் பேருந்து (Town Bus) வெஞ்சமாங்கூடல்
வழியாகச் செல்கிறது.
     3. இதுதவிர, கரூரிலிருந்து திண்டுகல்லுக்குப் போகும் இரு
பேருந்துகளும் இந்தக் கிராமம் வழியாகப் போகின்றன. தனிப் பேருந்தில்,
காரில், Vanல் செல்வோர் கோயில் வரை செல்லலாம்.

     வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து, குடகனாற்றில்
வெள்ளப்பெருக்கெடுத்ததனால் இக்கோயில் கருங்கற்கள் 2 கி.மீ. தூரம்
அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே வெள்ளப் பெருக்கின்
நிலைமையை உணரலாம். ஊரும் அழிந்தது. இந்நிலை நேர்ந்த
பல்லாண்டுகட்குப் பின்பு, 5-5-82ல் ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தார்
இக்கோயில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, பல லட்சங்கள்
திரட்டி, திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்து, 26-2-1986 அன்று (குரோதன
ஆண்டு மாசி 14 - புதன்கிழமை) மகா கும்பாபிஷேகத்தை நடத்தி
முடித்துள்ளனர்- பெருஞ்சாதனை.

     இத்தலம், வெஞ்சமன் என்னும் வேட்டுவ மன்னன் ஆண்டதாலும் ;
அமராவதியின் கிளை நதியான சிற்றாறு, அமராவதியுடன்