-“தங்குமன வஞ்சமாக்கூடல் வரையாதவர்சூழும் வெஞ்ச மாக்கூடல் விரிசுடரே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. விகிர்தநாதேஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் & அஞ்சல் - 639 109 (வழி) மூலப்பட்டி - அரவக்குறிச்சி வட்டம் - கரூர் மாவட்டம். 264/6. திருப்பாண்டிக்கொடுமுடி கொடுமுடி | கொங்கு நாட்டுத் தலம். தற்போது மக்கள் ‘கொடுமுடி’ என்று வழங்குகின்றனர். திருச்சி-ஈரோடு இருப்புப் பாதையில் உள்ள ஒரு நிலையம். ஈரோட்டிலிருந்து செல்ல பேருந்து வசதி உள்ளது. (ஈரோட்டிலிருந்து 39 கி.மீ.) சுயம்புமூர்த்தி தலம் - திருப்பாண்டிக் கொடுமுடி. கோயில்-கறையூர். “கற்றவர் தொழுதேத்தும் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி” என்பது திருமுறைத் தொடர். |