பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 81


திருப்புகழ்

  வடிவது நீலங்காட்டி முடிவுளகாலன்கூட்டி
    வரவிடு தூதன் கோட்டி                    -விடுபாசம்
  மகனொடுமா மன்பாட்டிமு தலுறவோருங்கேட்டு
    மதிகெட மாயந்தீட்டி                      -யுயிர்போமுன்
  படிமிசை தாளுங்காட்டியுடலுறு நோய் பண்டேற்ற
    பழவினை பாவம் தீர்த்து                   -னடியேனைப்
  பரிவொடு நாளுங்காத்து விரிதமிழாலங்கூர்த்த
    பரபுகழ் பாடென்றாட்கொ                  -டருள்வாயே
  முடிமிசைசோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில்
    முதிர் நடமாடுங் கூத்தர்                  -புதல்வோனே
  முருகவிழ்தாருஞ் சூட்டி யொருதனி வேழங்காட்டி
    முதல் மறமானின் சேர்க்கை               -மயல்கூர்வாய்
  இடியென வேகங்காட்டி நெடிதரு சூலந்தீட்டி
    யெதிர் பொருசூரன் தாக்க                -வரஏகி
  இலகிய வேல் கொண்டார்த்து உடலிருகூறன்றாக்கி
    யிமையவரேதந் தீர்த்த                   -பெருமாளே.


அஞ்சல் முகவரி :-

    அ/மி. வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்
     திருவாலங்காடு & அஞ்சல் - 631 210.
     (வழி) அரக்கோணம் திருத்தணி வட்டம் - திருவள்ளூர் மாவட்டம் 

16. திருப்பாசூர்

திருப்பாச்சூர்

     தொண்டை நாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் ‘திருப்பாச்சூர்’ என்று வழங்குகிறது.

     1. சென்னை - திருத்தணி  பேருந்துச்  சாலையில், கடம்பத்தூர் சாலை
பிரியுமிடத்தில்  முதலில்  திருப்பாசூர் உள்ளது. சாலையிலிருந்து பார்த்தாலே
கோயில் தெரிகின்றது.

     2. சென்னையிலிருந்து திருவாலங்காடு வழியாக அரக்கோணம் செல்லும்
பேருந்துச் சாலையில் திருப்பாசூர் உள்ளது.

தலம்-6