பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 813


     பண்ணினார் படியேற்றர் நீற்றர் மெய்ப்
     பெண்ணினார் பிறைதாங்கு நெற்றியர்
     கண்ணினார் கருவூருளானிலை
     நண்ணினார் நமையாளு நாதரே’             (சம்பந்தர்)

                       திருப்புகழ்

     மதியால் வித்தனாகி - மனதாலுத்தமனாகிப்
     பதிவாகிச் சிவஞான - பரயோகத் தருள்வாயே
     நிதியே நித்தியமேயென் - நினைவேநற் பொருளாயோய்
     கதியே சொற் பரவேளே - கருவூரிற் பெருமாளே.

                                  “தீண்டரிய
     வெங்கருவூர் வஞ்ச வினைதீர்த்தவர் சூழ்ந்த
     நங்கருவூர்ச் செய்யுள் நவரசமே”              (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. பசுபதீஸ்வரர் திருக்கோயில்
     கரூர் - 639 001.
     கரூர் மாவட்டம்.

266. திருஅஞ்சைக்களம்

ஸ்ரீவாஞ்சிகுளம்

     மலை (சேர) நாட்டுத்தலம்.

     சென்னை - கொச்சி இருப்புப்பாதையில் ‘இரிஞாலக்குடா’ நிலையத்தில்
இறங்கி, அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தினை அடையலாம்.
திருச்சூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. மலை நாட்டில் உள்ள ஒரே
திருமுறைத்தலம். மக்கள் வழக்கில் ஸ்ரீ வாஞ்சிகுளம் என்று வழங்கப்படுகிறது.
பரசுராமர் தாயைக் கொன்ற பாவம் நீங்க வழிபட்ட தலம். தனிப்பேருந்தில்
செல்வோர் கோயில்வரை செல்லலாம். சேரமான்பெருமாள் ஆண்ட ஊர் -
கொடுங்கோளூர் பக்கத்தில் 1 1/2 கி.மீ.ல் உள்ளது. கோயில் அமைந்துள்ள
வீதியின் முனையில் மகாதேவர் கோயில் என்று, வழிகாட்டும் பலகை
வைக்கப்பட்டுள்ளது.