பக்கம் எண் :

814 திருமுறைத்தலங்கள்


     கேரள பாணியில் அமைந்த கோயில்.
     இறைவன் - அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்.
     இறைவி - உமையம்மை.
     தீர்த்தம் - சிவகங்கை
     தலமரம் - சரக் கொன்றை

     சுந்தரர் பாடல் பெற்ற தலம்.

     கோயில் பெருவாயில் மேற்கு நோக்கியது - சுவாமி சந்நிதி கிழக்கு.
அம்மை சந்நிதி தனியே இல்லை. சுவாமிக்குப் பக்கத்திலேயே உள்ளது.
துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன. உள்ளே
குளம் உள்ளது. கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடிவெடித்துப்
பிரார்த்தனை செய்யும் வழக்கமுண்டாம்.

     மூலவர் மிகச்சிறிய சிவலிங்கம். கோஷ்டமூர்த்த அமைப்பு இல்லை.
விமானத்தில் யோக நரசிம்மர் உருவம் உள்ளது. உக்கிர ரூபம். இங்குள்ள
நடராசர், சேரமான் பெருமாள் பூசித்தது. பஞ்சலோகச்சிலை. இதன்கீழ்
“திருவஞ்சைக் களத்து சபாபதி” என்றெழுதப்பட்டுள்ளது.

     கோயிலுக்குச் செல்லும் போது, வீதியில் நடுவில் உள்ள பெரிய
மேடையை “யானைவந்த மேடை” என்று வழங்குகிறார்கள்.
கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு
ஏற்றிச் சென்றது வரலாறு.  

     கிழக்கு ராஜகோபுர முன்புறத்தில் நுழையும் போது, பக்கக் கற்சுவரில்,
யானை உருவங்கள், வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும்,
எதிர்ச்சுவரில் கோயிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்
பட்டுள்ளன. சுந்தரர், சேரமான் உருவங்களும் உள்ளன. (யானை வந்து
ஏற்றிச் சென்றதாக ஐதீகம்.)

     சுந்தரர் கயிலை சென்று ஆடி, சுவாமி நன்னாளன்று, ஆண்டு தோறும்
கோவை, சேக்கிழார் திருக்கூட்டத்தார் இல்லத்திற்கு வந்து சுந்தரர்,
சேரமானுக்கு அபிஷேகம் செய்து இவ்விழாவைச் சிறப்பாகக்
கொண்டாடுகிறார்கள். பாதுகாப்பு கருதி, கொடுங்கோளூர் பகவதி அம்மன்
கோயிலில் வைக்கப்பட்டுள்ள சுந்தரர், சேரமான் சிலைகளுக்கு அங்கேயே
உள்ள திருமண்டபத்தில் அபிஷேகம் செய்து அலங்கரித்து யானை குதிரை
வாகனங்களில் வைத்து, அஞ்சைக் களத்திற்கு விழாப் பொலிவுடன் எடுத்துச்
செல்லப்பட்டு, இத்திருவிழா சிரத்தையுடன் நன்கு செய்யப்படுகிறது.
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான்
சுவாமிகள் அவர்கள் சேரமான்