பெருமாள் பெயரில் ரூ.5000/- தேவாரப் பரிசு அறக்கட்டளையும், விழாவில் மகேஸ்வர பூசைக்கு ரூ.7000/- அறக்கட்டளையும் ஏற்படுத்தியுள்ளார்கள். கேரள வழிபாட்டு முறையில் இத்திருக்கோயிலில் (தந்திரமுறையில்) வழிபாடுகள் நடந்தாலும், இந்த ஒரு நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை நடைபெறுகின்றது. ஏகாதசருத்ரம் சங்காபிஷேகம், ம்ருத்யுஞ்சஹோமம் முதலியவைகள் இக்கோயிலில் நடத்தப் பெறுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள மரவேலைப்பாடுகள் காணத்தக்கவை. “சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே சிறியார் பெரியார் மனத்தேறலுற்றால் முந்தித் தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கமரா சந்தித்தடமால் வரைபோற்றிரைக(ள்) தணியாதிடறுங் கடலங்கரைமேல் அந்தித் தலைச் செக்கர் வானே யொத்தியா(ல்) அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே” (சுந்தரர்) (வெள்ளையானையின் மீதேறிக் கயிலை சென்றபோது சுந்தரர் பாடியருளியது வருமாறு.) “தானெனைமுன் படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்தயானை யருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலையுத்தமனே’. ‘மந்திரமொன்றறியோன் மனைவாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களாற்றுரிசே செயுங் தொண்டனெனை அந்தரமால் விசும்பில் அழகானை அருள்புரிந்த துந்தரமோ நெஞ்சமே நொடித்தான் மலையுத்தமனே.’ ‘மண்ணுலகிற் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேனின்றுகண் டொழிந்தேன் விண்ணுலகத்தவர்கள் விரும்பிய வெள்ளையானையின்மேல் என் உடல் காட்டுவித்தான் நொடித்தான் மலையுத்தமனே.’ இந்திரன் மால் பிரமன் எழிலார் மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை யருள்புரிந்து மந்திரமாமுனிவர் இவனாரென எம் பெருமான் நந்தமரூரன் என்றார் நொடித்தான்மலை உத்தமனே.’ |