‘ஊழி தொறூழி முற்றுயர் பொன்னொடித்தான் மலையைச் சூழிசையின கரும்பின் சுவை நாவலவூரன் சொன்ன ஏழிசையின் தமிழால் இசைந்தேத்திய பத்தினையும் ஆழி கடலரையா அஞ்சையப்பர்க்(கு) அறிவிப்பதே.’ (சுந்தரர்) (நொடித்தான் மலை - திருக்கயிலை) “நஞ்சைக் களத்துவைத்தநாத எனத் தொண்டர் தொழ அஞ்சைக் களஞ்சேர் அருவுருவே. (அருட்பா) அஞ்சல் முகவரி :- Sri. MAHADHEVA SWAMY TEMPLE Sri Vanchi Kulam & Post (Via) Kodungalloor - 680 664. Kerala (Trichur Dt.) 267. திருக்கோகர்ணம் கோகர்ணா | துளுவ நாட்டிலுள்ள ஒரே திருமுறைத் தலம். இத்தலம் கர்நாடக மாநிலத்தில் மேற்குக் கடற்கரையில் உள்ளது. 1) பெங்களூர் சென்று அங்கிருந்து அரசு விரைவுப் பேருந்து (Govt. Express Bus) மூலம் திருக்கோகர்ணம் சென்றடையலாம். 2) சென்னையிலிருந்து புகைவண்டி மூலம் செல்வதாயின், குண்டக்கல் வழியாக ஹு ப்ளி சென்று, அங்கிருந்து பேருந்தில் ஏறித் திருக்கோகர்ணத்தை அடையலாம். 3) மங்களூரிலிருந்தும் கோகர்ணத்திற்குப் பேருந்து செல்கின்றது. கோ - பசு, கர்ணம் - காது, சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இதற்கு ருத்ரயோனி, வருணாவர்த்தம் முதலிய பெயர்களுண்டு. இத்தலத்தை அப்பர், தாம் அருளிய திரு அங்கமாலையில் வைத்துப் பாடியுள்ளார். |