பக்கம் எண் :

820 திருமுறைத்தலங்கள்


     சந்திரனுந் தண்புனலுஞ் சந்தித் தான்காண்
          தாழ்சடையான்காண் சார்ந்தார்க் கமுதா னான்காண்
     அந்தரத்தி லசுரர்புரம் மூன்றட் டான்காண்
          அவ்வுருவி லவ்வுருவ மாயி னான்காண்
     பந்தரத்து நான்மறைகள் பாடி னான்காண்
          பலபலவும் பாணி பயில்கின் றான்காண்
     மந்திரத்து மறைப்பொருளு மாயி னான்காண்
          மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே.
                                        (அப்பர்)

         க்ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ்

     ஏகநா யகன்கயிலை இமையவர்கள் தம்பிரான்
          இராவண னுள்ளமகிழ
     ஈந்துசிவ லிங்கமொ றீதுதரை வையா
     திலங்கையில் கொடுபோவெனச்
     சாகரத் தின்கரையில் வரும்வேளை யொருபிரம
          சாரியாய் வாங்கியதனைத்
     தரைவைக்க அதுசத்த பாதாளம் வேருறச்
          சமர்செயுமி ராவணன்றன்
     ஆகமொரு பந்தென வெடுத்தண்ட கூடமுற
          அம்மானை ஆடிவிளையா
     டதிபலப ராக்கிரம விநாயகன் மகிழ்தம்பி
          அம்பரவை ஏத்தினாகரச்
     சீகரம் வந்துலவு கோகரணம் வாழ்முருக
          சிறுதே ருருட்டியருளே
     சிவன்மகா லிங்கபெல லிங்கமூர்த் தியருள்குக
          சிறுதே ருருட்டி யருளே.

            கோகர்ண ஸ்தல ஸ்துதி சுலோகம்

     கோகர்ணம் ஸா மஹா காசீ, விசுவ நாதோ மஹாபல :
          கோடி தீர்த்தஸ் தத்ர கங்கா ஸமுத்ரோயம் விசிஷ்யதே.
     குஞ்சா மாத்ரா திகம் காசியா கோகர்ண மபிதீயதே
          கோகர்ண ஸத்ருசம் க்ஷேத்ரம் நாஸ்தி ஜகத்ரயே.
     ஸர்வேஷாம் சிவலிங்காநம் ஸார்வபௌமோ மஹாபல :
          மஹாபல ஸமலிங்கம் நபூதோ நபவிஷ்யதி.
     கங்காதி ஸரிதோ யஸ்மாத் ஸாகரம் ப்ரவிசந்தி ஹி
          தஸ்மாத் ஸமுத்ரேஹ்யதிகோ கோகர்ண தத் விசிஷ்யதே
     ஆத்யம் பசுபதே ஸ்தாநம் தர்சநாத்ஏவ முக்திதம்
          யத்ர பாபோபி மநுஜ : ப்ராப்நோத்ய பயதம் பதம்.