பச்சிமாம்புதி தீரஸ்தம் கோகர்ணக்ஷேத்ர முத்தமம் மஹாபல ஸமம் லிங்கம் நாஸ்தி ப்ரஹ மாண்ட கோளகே. பூர்வே ஸித்தேச்வரோ நாம, தக்ஷிணத் யக நாசிநீ, உத்தரே சால்மலீ கங்கா, பச்சிமே லவணாம் விதி : பொருள் :- (1) கோகர்ணமே மஹாகாசி, மஹாபலரே விசுவநாதர், கோடி தீர்த்தமே கங்கை ; சமுத்திரம்கூட இருப்பததால் பின்னும் விசேஷம். (2) காசியிலும் ஒரு பங்கு அதிகம் கோகர்ணம், அதற்கு இணையான தலம் மூவுலகிலும் இல்லை. (3) எல்லாச் சிவலிங்கங்களுக்கும் மஹா பலரே சக்ரவர்த்தி ; அவருக்கு இணை இன்றும் இல்லை, என்றும் இராது. (4) கங்கை முதலான சகல தீர்த்தங்களும் இங்கு கடலிற் சேர்கின்றபடியால் கோகர்ணத்தில் உள்ள சமுத்திரதீர்த்தம் பெருமைவாய்ந்தது. (5) மஹாபாலேசுவரர் ஆதிமூர்த்தி ; தரிசித்த மாத்திரத்தில் அவர் முத்தியளிப்பவர் ; பாபியான மனிதனுக்கும் அவர் அபயம் அளிப்பார். (6) மேற்குக்கரையில் உத்தம கோகர்ணம் அமைந்துள்ளது. ; பிரம்மாண்ட கோளத்தில் மஹாபல லிங்கத்துக்கு இணையில்லை. (7) கிழக்கில் சித்தேசுரர், தெற்கே அகநாசினி, வடக்கில் சால்மலி கங்கை ; மேற்கே உப்புக்கடல். “- “கோபலத்திற்காண்பரிய கோகரணம் கோயில் கொண்ட மாபலத்து மாபலமா மாபலமே.” (அருட்பா) அஞ்சல் முகவரி :- அ/மி. மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம் & அஞ்சல் - 576 234 (GOKARNA) (கர்நாடகா) 268/1. திருப்பருப்பதம் ஸ்ரீசைலம் | வடநாட்டுத் தலங்களுள் ஒன்று. ஆந்திர மாநிலத்தில் கர்நூல் மாவட்டத்தில் நந்தியாலுக்குப் பக்கத்தில் உள்ளது. திருப்பதியிலிருந்து 500 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு அங்கிருந்து நேரே செல்லப் பேருந்து வசதியுள்ளது. சென்னையிலிருந்தும் ஸ்ரீ சைலத்திற்குப் பேருந்து செல்கிறது. |