பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்தலங்களுள் ஒன்று. சக்திபீடத்தில் இத்தலம் பிரமராம்பாள் பீடமாகப் போற்றப்படுகிறது. அர்ஜு னம்- மருதமரம். இம்மருத மரத்தைத் தலமாகக் கொண்டுள்ள தலங்கள் மூன்று. அவை அர்ஜு னத் தலங்கள் எனப்படும். இத்தலம் அவற்றுள் மல்லிகார்ஜு னம் எனப்படும். ஏனைய இரண்டும் ; (1) திருவிடைமருதூர் - மத்தியார்ச்சுனம் (2) நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ச்சனம் என்பன. சந்திரவதி என்னும் பெண் அடியவர், மல்லிகை மலர்களால் இப்பெருமானை அருச்சித்து வழிபட்டதால் இத்தலத்திறைவன் மல்லிகார்ச்சுனர் என்று பெயர் பெற்றார். சிலாத முனிவர் தவஞ்செய்த தலமாதலின் (ஸ்ரீ) சைலம் எனப்படுகிறது. நந்திதேவர் இங்குத் தவஞ்செய்து இறைவனைச் சுமக்கும் ஆற்றலைப் பெற்றார் என்றும், அவரே இங்கு மலையாக இருந்து பெருமானைத் தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது. இத்தலத்தின் அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. வீரசைவர்கள் இம்மலைப்பகுதியை ‘பூகயிலாயம்’ என்று புகழ்வர். சிவராத்திரி வழிபாடு ஜோதிர்லிங்கத் தலங்களில் விசேஷமானது. அம்முறையில் இங்கும் சிவராத்திரி நாள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஜோதிர்லிங்கத் தலங்களுள் தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று தலங்களுள் இதுவும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம், திருக்கேதாரம் என்பன. இறைவன் - மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், சீபர்ப்பதநாதர் இறைவி - பிரமராம்பிகை. தலமரம் - மருதமரம், திரிபலாமரம். தீர்த்தம் - பாலாழி முதலாகவுள்ள பல தீர்த்தங்கள். மூவர் பாடல் பெற்ற தலம். மேதி, ரவி, ஜு வி என்னும் மூன்று மரங்களின் சேர்க்கையே திரிபலா மரம் ஆகும். தத்தாத்ரேயர் இம்மரத்தினடியில் தவஞ் செய்ததால் இது தத்தாத்ரேய விருக்ஷம் என்றும் சொல்லப்படும். இம்மரம் விருத்த மல்லிகார்ஜு னர் கோயிலில் உள்ளது. (கரவீரம் என்னும் பழமையான மரமும் இங்குள்ளது.) சம்பந்தரும், சுந்தரரும் காளத்தியைத் தொழுத பின்னர் அங்கிருந்தே வடக்கு நோக்கித் தொழுது பாடினர். திருநாவுக்கரசர் மட்டும், |