பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 823


     தம்முடைய கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப்
பாடினார்.

     சம்பந்தர், அப்பர் பதிகங்களில் இத்தலம் திருப்பருப்பதம் என்றும்
சுந்தர் பதிகத்தில் சீபர்ப்பதம் என்றும் குறிக்கப்படுகின்றது.

     இம்மலையடிவாரத்தில் கிருஷ்ணாநதி பாய்ந்தோடுகிறது. இதனைப்
பாதாள கங்கை என்று கூறுகின்றனர். இவ்வாற்றின் தென்கரையில்தான்
கோயில் அமைந்துள்ளது.

     இம்மலையில் எட்டு சிகரங்கள் உள்ளன. அவை (1) வைடூரிய சிகரம்
(2) மாணிக்க சிகரம் (3) பரவாளி சிகரம் (4) பிரம்ம சிகரம் (5) ரௌப்ய
சிகரம் (6) க்ஷேமா சிகரம் (7) மரகத சிகரம் (8) வஜ்ர சிகரம் என்பன. இங்கு
ஒன்பது நந்திகள் உள்ளன. அவை (1) பிரதம நந்தி (2) நாக நந்தி
(3) விநாயக நந்தி (4) கருடநந்தி (5) சிவ நந்தி (6) மகா நந்தி (7) சூரிய நந்தி
(8) விஷ்ணு நந்தி (9) சோம நந்தி என்பன.

     இவ்வாறே இங்கு ஒன்பது கோயில்களும் உள்ளன. அவை
(1) பிரமேஸ்வரம் (2) வருணேஸ்வரம் (3) இந்திரேஸ்வரம்
(4) ஜனார்த்தனேஸ்வரம் (5) சப்தகோடீஸ்வரம் (6) குக்குடேஸ்வரம் (7)
ஹேமேஸ்வரம் (8) அக்னேஸ்வரம் (9) மோக்ஷேசுவரம் என்று வழங்கப்
படுகின்றன.

     கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுர
வாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள
பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. ஆலய முகப்பில் சித்தி
விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகச்
சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. பளிங்குக் கல்லால் ஆன
சண்முகர் கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில்,
பஞ்ச நதீஸ்வரர் ஆலயம் முதலியன தரிசிக்கத்தக்கன. தெற்கு வாயில்
கோபுரம் ‘ரங்க மண்டபம்’ எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண
மண்டபமுள்ளது. நாடொறும் காலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரை
பலவித அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. மஹாசிவராத்திரியில் பாதாள
கங்கையில் நீராடி, மல்லிகார்ச்சுனரைச் சேவிப்பது மிகப்பெரும்
புண்ணியமாகும்.

     யாத்திரிகர்கள் தங்குவதற்குச் சத்திரங்களும் விடுதிகளும் உள்ளன.

    இத்தலத்திற்குரிய கல்வெட்டுக்கள் விஜய நகர மன்னர்கள், சாளுவ
காகதீய மன்னர்கள் காலத்தியவை. இவற்றிலிருந்து அன்னதானத்திற்குக்
கட்டளைகள் அமைத்தது, தீர்த்தக்குளம் வெட்டியது.