பக்கம் எண் :

824 திருமுறைத்தலங்கள்


     கோயிலில் திருப்பணிகள் செய்தது, கோயிற் பணியாளர்கட்கு வீடுகள்
கட்டித் தந்தது முதலான செய்திகள் தெரியவருகின்றன.

     சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான்
     இடுமணி யெழிலானை யேறல னெருதேறி
     விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்
     படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே. (சம்பந்தர்)

     கரவிலா மனத்தராகிக் கைதொழு வார்கட்கென்றும்
     இரவுநின் றெரியதாடி யின்னருள் செய்யுமெந்தை
     மருவலார் புரங்கண்மூன்று மாட்டிய வகையராகிப்
     பரவுவார்க் கருள்கள் செய்து பருப்பத நோக்கினாரே. (அப்பர்)

     மானும்மரை இனமும்மயி லினமுங்கலந் தெங்கும்
     தாமேமிக மேய்ந்துடஞ் சுனைநீர்களைப் பருகிப்
     பூமாமர முறிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத்
     தேமாம்பொழில் நீழற்றுயில் சீபர்ப்பத மலையே.

     ஜோதிர்லிங்கத் தலங்கள் பற்றிய சுலோகம் :
     “ஸௌராஷ்ட்ரே ஸோமநாதம்ச ஸ்ரீ சைலே மல்லிகார்ச்சுனம்
     உஜ்ஜயின்யாம் மகாகாளம் ஓங்காரம் அமலேச்வரம்
     பரல்யாம் வைத்யநாதம்ச டாகின்யாம் பீமசங்கரம்
     சேதுபந்தேது ராமேசம் நாகேசம் தாருகாவனே
     வாராணஸ்யாம் து விச்வேசம் த்ரயம்பகம் கௌதமீதடே
     ஹிமாலயேது கேதாரம் குஸ்மேசம் சிவாலயே
     ஏதானி ஜோதிர் லிங்கானி ஸாயம் ப்ராத: படேந்த:
     ஸப்த ஜன்ம கிருதம் பாபம் ஸ்மரணே வினச்யதி”


     ஜோதிர்லிங்கத் தலங்கள் பன்னிரண்டையும் இச்சுலோகங்கள்
தெரிவிக்கின்றன. அவை சோமநாதம், ஸ்ரீசைலம், உஜ்ஜையினி, ஓங்காரம்,
வைத்தியநாதம், பீமசங்கரம், இராமேசுவரம், நாருகசம், விஸ்வேசம் (காசி),
த்ரயம்பகம், கேதாரம், குஸ்மேசம் எனப்படும். இவற்றுள் சோமநாதம்
குஜராத்திலும், வைத்தியநாதம், பீமசங்கரம், நாகேசம், த்ரயம்பகம், குஸ்மேசம
ஆகியன மகாராஷ்டிர மாநிலத்திலும், ஸ்ரீ சைலம் ஆந்திர மாநிலத்திலும்,
ஓங்காரம், உஜ்ஜையினி மத்தியப் பிரதேசத்திலும், வாரணாசி (விஸ்வேசம்),
கேதாரம் உத்தரப் பிரதேசத்திலும், இராமேசுவரம் தமிழ்நாட்டிலும் உள்ளன.