திருப்புகழ் ஒன்பது மிருபது மறுபது முடனறு முணர்வுற இருபத முளநாடி உருகிட முழுமதி தழலென வொளிதிகழ் வெளியோடு வொளிபெற விரவாதே தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து திரிதொழி லவமது புரியாதே திருமகள் மருவிய திரள்புய அறுமுக தெரிசனை பெற அருள் புரிவாயே பரிவுடனழகிய பழமொடு கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம் பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி எழுதிய கணபதி யிளையோனே பெருமலை யுருவிட அடியவ ருருகிட பிணிகெட அருள்தரு குமரேசா பிடியொடு களிறுகள் நடையிடகலைதிரள் பிணையமர் திருமலை பெருமாளே. “பாகியற்சொன் மங்கையொடும் பாங்கார் பருப்பதத்தில் போகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே.” (அருட்பா) அஞ்சல் முகவரி:- SRI MALLIKARJUNESWARAR TEMPLE Sri Sailam - 518 100 Kurnool Dt. - Andra pradesh. 269/2. இந்திரநீல பருப்பதம்
| வடநாட்டுத் தலம். இமயமலைச் சாரலில் உள்ளது. இந்திரனால் வழிபட்ட தலம். இறைவன் - நீலாசலநாதர் இறைவி - நீலாம்பிகை தீர்த்தம் - இந்திரதீர்த்தம் |