சம்பந்தர் பாடல் பெற்றது. தென்கயிலாயமான திருக்காளத்தியை வணங்கிய பின்பு அங்கிருந்தே தொழுது இத்தலத்தைப் பாடினார். “தந்தத்திந்தத் தடமென்றருவித் திரள்பாய்ந்து போய்ச் சிந்தவெந்த கதிரோனொடு மாசறு திங்களா(ர்) அந்தமில்ல அளவில்ல அனே கதங்காபத (ம்) எந்தை வெந்த பொடி நீறணிவார்க்கு இடமாவதே.” (சம்பந்தர்) -“நீடுபவம் தங்காதவனேக தங்கா பதஞ்சேர்ந்த நங்காதலான நயப்புணர்வே.” (அருட்பா) வடநாட்டுத் தலம். ஹரித்வாரிலிருந்து 250 கி.மீ. தொலைவு. ஆறுமாதகாலம் (தேவபூஜை) கோயில் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும். எவரும் செல்ல முடியாது. ஜோதிர்லிங்கத்தலம். ஆறுமாத காலம் (மனிதபூஜை) கோயில் திறந்து பூஜை நடைபெறுகின்றது. கோயில் அக்டோபர் மாதம் மூடப்பட்டுப் பனிக்காலம் கழிந்த பின்னர் மே மாதம் திறக்கப்படுகிறது. பிருங்கி முனிவரின் பொருட்டு உமையம்மை இறைவனை வழிபட்டு இடப்பாகம் பெற்ற தலம். புதுடில்லியிலிருந்தும் ஹரித்துவாரிலிருந்தும் பேருந்தில் சென்று கௌரி குண்டம் அடைந்து அங்கிருந்து நடந்தும் குதிரைமேலும் டோலியிலும் 14 கி.மீ. மலையேறிச் செல்ல வேண்டும். கடினமான பாதை - மலைச்சூழல். ஏற்ற பருவகாலம் அறிந்து செல்ல வேண்டும். இறைவன் - கேதாரேஸ்வரர் இறைவி - கேதாரகௌரி சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்றது. இருவரும் தென்கயிலாயமான திருக்காளத்தியிலிருந்தே இமயமலைச் சாரலில் உள்ள இத்தலத்தைப் பாடித் தொழுதனர். |