“ஏதமில பூதமொடு கோதை துணை யாதிமுதல் வேத விகிர்தன் கீதமொடு நீதிபல வோதி மற வாது பயினாதனகர்தான் தாதுபொதி போதுவிட வூதுசிறை மீதுதுளி கூதல்நலியக் காதன்மிகு சோதிகிளர் மாதுபயில் கோது கயிலாயமலையே.” (சம்பந்தர்) “வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி காற்றாகி யெங்கும் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ! (அப்பர்) “தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே நானென பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே.” (சுந்தரர்) “உருவுபல கொண்டு உணர்வரிதாய் நிற்கும் ஒருவன் ஒருபால் இருக்கை - மருவினிய பூக்கையிற் கொண்டு எப்பொழுதும் புத்தேளிர் வந்திறைஞ்ச மாக்கயிலை என்னும் மலை” (நக்கீரர்) புமியதனிற் ப்ரவுதான - புகலியில் வித்தகர்போல அமிர்தகவித் தொடைபாட - அடிமைதனக் கருள்வாயே சமரி லெதிர்த்தசுர்மாள - தனியயில் விட்டெறிவோனே நமசிவயப் பொருளானே - ரசதகிரிப் பெருமாளே. (திருப்புகழ்) - எண்ணிறைந்த சான்றோர் வணங்கு நொடித்தான் மலையில் வாழ்கின்ற தேன்தோய் அமுதச் செழுஞ்சுவையே - வான்தோய்ந்த இந்திரரும் நாரணரும் எண்ணில் பிரமர்களும் வந்திறைஞ்சும் வெள்ளி மலையானே - தந்திடுநல் தாய்க்குங் கிடையாத தண்ணருள் கொண்டன்பருளம் வாய்க்கும் கயிலை மலையானே.” (அருட்பா) |