மன்னு திருக்கோணமலை மகிழ்ந்த செங்கண் மழவிடையார்” என்று பாடியருளியுள்ளார். இக்கோவிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்குத் திரிகூடம் என்றும் பெயர் உண்டு. திருக்கோணேஸ்வரத் திருக்கோவில் பரிபாலனத்திற்குப் போதியளவு வருவாயுண்டு. இங்கே சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழி வகுத்தவர்கள், தாமரைத்தண்டின் நூலெடுத்துத் திரிசெய்தார். அந்த ஊர் இன்றும் “திரிதாய்” என வழங்குகின்றது. போர்த்துக்கேயர் 1624 ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ் செய்துள்ளனர். அன்று அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும் பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லானைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக் கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்திரவு பிறப்பித்தான். அந்தக் கோபுரத்தழகைக் காட்டும் சித்திரம் இன்றும் விஸ்பன் நகரில் உள்ளது என்பர். திருக்கோயிலிருந்த நிலத்தில் வழிபாடாற்றுவதற்கு ஏதாவது செய்யத் துணிந்தார்கள். சுதந்திரம் பெற்றபின் 1950ஆம் ஆண்டில் ஓர் ஆலயம் அமைக்க முற்பட்டுக் காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தளச் செய்தார்கள். அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில் அற்புதமோ சிவனருளோ யாதோ என்று கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய தெய்வத்திருவுருவங்கள் வெளிக்கிளம்பின. அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன. இவை யாவும் ஓரளவு நிறைவு பெறவே 1963ம் ஆண்டில் கும்பாபிடேகம் நடைபெற்றது. அன்றுதொட்டு மேலும் பல திருப்பணிகள் நிறைவேறியபின் 1981ஆம் ஆண்டில் இரண்டாம் கும்பாபிடேகம் நிறைவேறியது. இரண்டாம் கும்பாபிடேகத்தின் பின் பூரணமாயமைந்த இக்கோயிலின் புனிதமும் சாந்நித்யமும் அனைவரையும் காந்தம்போல இழுக்கின்றன. ஐம்பொன்னாலாய அழகு மிக்க மூர்த்தங்கள் இருக்கும் மண்டபம் - தேவ மண்டபம் கண்கொள்ளாக்காட்சி தருவதாகும். முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும் இடையிலும் அடிவாரத்திலுமாக |