பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 833


     மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பர். இன்றைய ஆலயம்
ஆகமவிதி களுக்கமைய அமைந்துள்ளது. அர்த்தமண்டபம், ஸ்நபன
மண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை, பாகசாலையாகவும் ஒழுங்காகவுள்ளன.
ஆலயம் அடக்கமாகவும் அலங்காரமாகவும் உள்ளது. இராஜகோபுரம் அழகாக
வுள்ளது. ஸ்நபனமண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான்
ஆடல் புரிந்தவண்ணம் எழுந்தருளியுள்ளார். தேவசபை என்னும் அமைவில்
வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியப் பெருமானும், சோமாஸ்கந்த
மூர்த்தமும் சந்திரசேகர மூர்த்தமும் உள்ளனர். இவர்கள் எழுந்தருளிகளாக
இருக்கிறார்கள். அப்பால் சுற்றுப்பிராகாரங்கள், சூரியன், சந்திரன்,
நாகதம்பிரான், பைரவர், சண்டேசுவரர் ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
கல்லாலமரம் தலவிருட்சமாயுள்ளது. பறங்கியர் கெடுபிடியின் பின்
ஆங்கிலேயர் காலத்தில் கிடைத்த வழிபாட்டு அனுமதியின்போது நடைபெற்ற
மலைபூசை ஆகாச வெளியில் இன்றும் நடைபெற்று வருகிறது. ஆலயப்
பூசைகளுக்கு முன் ஆகாசப்பூசை வெளியிடையொன்றாய் விளங்குபவர்க்கு
அக்ரபூசையாய் நடைபெறுகிறது. நாள்தோறும் ஆறுகாலபூசை ஆகம விதிகள்
தவறாமல் நடைபெறுகின்றன.

     ஆண்டுதோறும் பங்குனி உத்திரநாளில் கொடியேறிப் பதினெட்டு நாள்
திருவிழா நடைபெறுகிறது. இங்கே நடைபெறும் சிவராத்திரி விழா
அருமையானது. சிவராத்திரிக்கு முன்னுள்ள பதினைந்து நாள்களிலும்
அபிடேகம் நடைபெறும். சிவராத்திரிக்கு அடுத்த நாள் பெருமாட்டி
சமேதராய் எழுந்தருளி நகர்வலம் வருகிறார். அயலில் உள்ள ஆலயங்களில்
வரவேற்புப் பூசையும் விழாவும் நடைபெற்ற பின் மூன்றாம்நாள்
திருக்கோயிலுக்கு மீளும் விழா நடைபெறுகிறது. மூன்று நாளும்
திருக்கோணமலை நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். வீதிகள் தோறும்
மக்கள் மனைகள் தோறும் மங்கல விளக்கேற்றி மண்டகப்படி வைத்து மகிழும்
காட்சி பண்டைய இந்திர விழாவை நினைவுபடுத்தும்.

     திருக்கோணேசப் பெருமானின் விழாக்களில் வெளிவாரியாக
நடைபெறுவது ஆடி அமாவாசை விழாவாகும். கடலில் தீர்த்தமாடுவதற்குப்
பெருமான் எழுந்தருளும்போது நகரிலுள்ள ஆலயங்களின் மூர்த்திகளும்
தீர்த்தமாட அங்கே எழுந்தருளுவார்கள். இதுபோலவே மகாமகத் தீர்த்த
விழாவும் நடைபெறுகிறது. பங்குனி மாத மகோற்சவத்தை அடுத்துவரும்
பூங்காவனத் திருவிழாவும் தெப்பத் திருவிழாவும் அலங்காரமானவை.
தெப்பத்திருவிழாவில் சுவாமி தெப்பமேறிக் கடற்கரையில் காட்சி கொடுத்தல்
நகரத்தையே ஒளியூட்டுவதாய் அமைகிறது. அவ்வேளை நகரத்துக்குப்
பெருவிருந்தாகக்

தலம்-53