பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 835


     மதில் உட்பிராகாரத்தைக் காக்கிறது. இங்கே எழுந்தருளியுள்ள
ஆதிகோணேசநாயகரோடு உடனுறையும் தேவியார் அம்சகமனாம்பிகை
இருவருக்கும் தனியாக அழகிய இருப்பிடம் உண்டு. இன்னும் பரிவாரத்
தெய்வங்களாக விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், நவக்கிரகங்கள்
உள்ளார்கள். ஆனி உத்தரகாலங்களில் கொடியேறிப் பதினெட்டு நாள்கள்
நடைபெறும் திருவிழாக்களின் பொலிவு பெரிது. ஆடி அமாவாசை நாளில்
பெருமான் மாவலிகங்கைப் படுக்கையில் தீர்த்தமாடுஞ் சிறப்பு கண்கொள்ளாக்
காட்சியாகும். திருகோணேஸ்வரத்தின் தொல்புகழ் பாடும் தேவாரம்,
திருப்புகழ் தவிரப் பல புராணங்களும், பிரபந்தங்களும் உள்ளன. கல்வெட்டுச்
செய்திகளும் உண்டு.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

    
 “தாயினும் நல்ல தலைவர் என்றடியார்
          தம்மடி போற்றிசைப்பார்கள்
     வாயினு மனத்து மருவி நின்றகலா
          மாண்பினர் காண் பலவேடர்
     நோயிலும் பிணியுந் தொழிலர் பால் நீக்கி
          நுழைதரு நூலினர் ஞாலம்
     கோயிலுஞ் சுனைங் கடலுடன் சூழ்ந்த
          கோணமாமலை யமர்ந்தாரே.”     (சம்பந்தர்)

     “நாட்டும் புகழ் ஈழநாட்டில் பவ இருளை
     வாட்டுந் திருக்கோண மாமலையாய்.”     (அருட்பா)

274/2. திருக்கேதீச்சுரம்

     இலங்கை என்னும் ஈழநாட்டிலேயுள்ள இணையில்லாத ஈஸ்வரங்களுள்
திருக்கேதீஸ்வரமும் ஒன்று. முன்னொரு காலத்தில் கேது பூசித்தமையால் இது
கேதீஸ்வரம் என்று பெயர் பெற்றது என்பர். “செய்ய கேது தலையற்ற
அந்நாள் திருந்து பூசனை செய்து முடிப்போன்” என்பது பழம்பாடல்.
தொண்டர்கள் நாள்தோறும் துதிசெய அருள்செய் கேதீச்சரமதுதானே
என்பது திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரம்.

     தமிழ்நாட்டார் இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் வழி வந்து,
தலைமன்னாரிலிருந்து இங்கே வரலாம். கொழும்பிலிருந்து