பக்கம் எண் :

836 திருமுறைத்தலங்கள்


மன்னார்வரை புகைவண்டியில் வருவதாயின் திருக்கேதீஸ்வர நிலையத்தில்
இறங்கி வரலாம்.

     இலங்கையில் வடபாகத்தில் மாந்தை என்னும் மாதோட்டநகரிலே
உள்ளது திருக்கேதீஸ்வரம். பாலாவிக் கரையில் கௌரியம்பாள் சமேதராய்
எழுந்தருளியுள்ளார் திருக்கேதீஸ்வரர். தலவிருட்சம் - வன்னிமரம்.

     சிதம்பரத்தைப்போல நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது
இத்தலம். மன்னாரையடுத்த மாதோட்டம் முன்னாளில் மிகப் பெரிய துறைமுக
நகரமாய் நிலவியது. கிரேக்க, உரோமர், அரேபியர் முதலானோர் கடல்
கடந்து வந்து இங்கே வர்த்தகம் செய்தனர். மாதோட்டத்தை மருவினாற்போல
அமைந்த வங்காலை என்னும் இடம் வங்கங்கள் நிறைந்து விளங்கியது.
“வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில், பங்கஞ்செய்த மடவாளொடு
பாலாவியின் கரைமேல், தெங்கம் பொழில் சூழ்ந்த திருக்கேதீச்சரத்தானே”
என்று சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளினார். இப்பதி ஞானசம்பந்தர்,
சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்றது.

     பழைய திருக்கேதீஸ்வரம் பொலிவு 16 ஆம் நூற்றாண்டில்
முற்பகுதியிலேயே அக்காலத்து வீசிய புயற்காற்றில் மங்கிவிட்டது.
திருக்கேதீஸ்வரத்தின் அழிபாடுகள் பரந்துபட்ட நிலப்பரப்பெங்கும் காணக்
கூடியனவாகப் பழைய செங்கட்டிகள், ஓடுகள், அத்திவாரங்கள் எங்கும்
கிடக்கின்றன. பாலாவி ஆறு பரந்து பாயும் நிலை தடுக்கப்பட்டுப்
பெருங்குளமாகக் குறுகியுள்ளது. அதனையடுத்து பாப்பா மோட்டை,
மாளிகைத்திடல், வேட்டையாமுறிப்பு, கோயிற்குளம், பரந்துபட்ட நெல்
வயல்கள், தென்னந்தோப்புகள் இன்றும் உள்ளன. அங்கே கிடைத்த
மாந்தைக் கல்வெட்டுகள் சோழர் பணிகளைப் பற்றிக் கூறுகின்றன.

     அக்காலத்தில் திருக்கேதீஸ்வரப் பகுதி கோயில் நகரம் என வழங்கியது.
அதனை இராசராசசேகரன் மகன் இராசேந்திரன் தன் தந்தை பெயரால்
அருள்மொழித்தேவன் வளநாடு என வழங்கினான். இன்று பாப்பா மோட்டை
என வழங்குமிடம் பிராமணர் குடியேறியிருந்த மேட்டு நிலமாகும்.
வேட்டையாமுறிப்பு என்பது அக்காலத்தில் கேதீஸ்வரநாதன் வேட்டைத்
திருவிழாவுக்கு உலாப் போந்த பகுதியாகும்.

     சோழர் காலத்தில் மாதோட்டத்து இராசராசபுரம் என வழங்கிய பகுதி,
தமிழ்நாட்டுக் குலசேகரப்பட்டினம் போலப் பெருமைவாய்ந்ததாயிருந்தது.
சோழரின் பின்வந்த பாண்டியர்களுள் சுந்தரபாண்டியன்