| திருப்பள்ளியெழுச்சி “முந்திய முதல்நடு இறுதியுமானாய் மூவரும் அறிகிலர் யாவர்மற்றறிவார் பந்தணை விரலியும் நீயும் நின்அடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே செந்தமிழ் புரை திருமேனியுங்காட்டித் திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி அந்தணனாவதும் காட்டி வந்தாண்டாய் ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே செத்திலாப்பத்து “புலையனேனையும் பொருளென நினைந்துன் அருள்புரிந்தனை புரிதலும் களித்துத் தலையினால் நடந்தேன் விடைப் பாகா சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம் நிலையனே அலை நீர் விடமுண்ட நித்தனே அடையார் புரமெரித்த சிலையனே யெனைச் செத்திடப் பணியாய் திருப் பெருந்துறைமேவிய சிவனே” அடைக்கலப்பத்து “வழங்கு கின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக் கொண்டு விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதியின்மையால் தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத் தந்துய்யக் கொள்ளாய் அழுங்கு கின்றேன் உடையாய் அடி யேன்உன் அடைக்கலமே.” ஆசைப்பத்து “கையால் தொழுதுன் கழற் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன் தலைமேல் வைத்தெம் பெருமான் பெருமானென்று ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்ப ஐயாற்றரசே ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.” |