பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 863


                        பிரார்த்தனைப்பத்து

     “மானோர் பங்கா வந்திப்பார்
          மதுரக்கனியே மனம்நெகா
     நானோர் தோளாச் சுரையொத்தால்
          நம்பி இத்தால் வாழ்ந்தாயே
     ஊனே புகுந்த உனையுணர்ந்தே
          உருகிப் பெருகும் உள்ளத்தைக்
     கோனே அருளுங் காலத்தான்
          கொடியேற் கென்றோ கூடுவதே.”

                       குழைத்தபத்து

     ஒன்றும் போதா நாயேனை
          உய்யக் கொண்ட நின்கருணை
     இன்றே இன்றிப் போய்த்தோதான்
          ஏழை பங்கா எங்கோவே
     குன்றே அனைய குற்றங்கள்
          குணமாம் என்றேநீ கொண்டால்
     என்தான் கெட்டது இரங்கிடாய்
          எண்தோள் முக்கண் எம்மானே.

                    உயிருண்ணிப்பத்து

    
 நானார் அடியனை வானொரு
          நாய்க்குத்த விசிட்டிங்கு
     ஊனாருடல் புகுந்தானுயிர்
          கலந்தான் உளம்பிரியான்
     தேனார்சடை முடியான் மன்னு
          திருப்பெருந்துறை உறைவான்
     வானோர்களும் அறியாததோர்
          வளம் ஈந்தனன் எனக்கே.

                  பாண்டிப்பதிகம்

     
அழிவின்றி நின்றதோர் ஆனந்த
          வெள்ளத் திடையழுத்திக்
     கழிவில் கருணையைக் காட்டிக்
          கடிய வினையகற்றிப்
     பழமலம் பற்றறுத்தாண்டவன்
          பாண்டிப் பெரும்பதமே
     முழுதுலகுந்தரு வான்கொடை
          யேசென்று முந்துமினே