திருஏசறவு நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே அற்புதப்பத்து மாடும் சுற்றமும் மற்றுளபோகமும் மங்கையர் தம்மோடும் கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை வீடுதந் தென்றன் வெந்தொழில் வீட்டிட மென்மலர்க் கழல் காட்டி ஆடுவித்தென தகம் புகுந்தாண்டதோர் அற்புதம் அறியேனே சென்னிப்பத்து அட்டமூர்த்தி அழகன் இன்னமு தாய ஆனந்த வெள்ளத்தான் சிட்டன் மெய்ச்சிவலோக நாயகன் தென்பெருந்துறைச் சேவகன் மட்டுவார் குழல்மங்கை யாளையோர் பாகம் வைத்த அழகன்தன் வட்டமாமலர்ச் சேவடிக்கண் நம் சென்னி மன்னி மலருமே. திருவார்த்தை வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கருணைக்கடலாய் அடியார் பந்தனை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதிஅந்நாள் வந்து திரைக்கடலைக் கடந்தன்று ஓங்குமதில் இலங்கை அதனில் பந்தணை மெல்விர லாட்கருளும் பரிசறிவார் எம்பிரானாவாரே. |