திருவெண்பா யாவர்க்கம் மேலாம் அளவிலாச் சீருடையான் யாவர்க்கும் கீழாம் அடியேனை - யாவரும் பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை. பண்டாய நான்மறை காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பமெனப் பேணும் அடியார் பிறப்பகலக் - காணும் பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும் பிரியானை வாயாரப் பேசு. “உருவெளி தான்வாதவூர் உத்தமர்க்கு அல்லால் இனமுங் குருவழி நின்றார்க்கும் உண்டோ கூறாய்பராபரமே.” (தாயுமானவர்) திருப்புகழ் வரித்தகுங் குமமணி முலைக்குரும் பையர்மன மகிழ்ச்சி கொண் டிடஅதி விதமான வளைக்கரங் களினொடு வளைத்திதம் மயக்கவந் ததிலறி வழியாத கருத்தழிந் திடஇரு கயற்கணும் புரள்தர களிப்புடன் களிதரும் மடமாதர் கருப்பெருங் கடலது கடக்கஉன் திருவடி களைத்தரும் திருவுளம் இனியாமோ பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு புகைபரந் தெரிஎழ விடும் வேலா புகழ்ப்பெருங் கடவுளர் களித்திடும் படிபுவி பொறுத்தமந் தரகிரி கடலூடே திரித்தகொண் டலுஒரு மறுப்பெறும் சதுமுக திருட்டிஎண் கணன் முதல் அடிபேணத் திருக் குருந் தடியமர் குருத்வசங் கரரொடு திருப்பெருந் துறையுறை பெருமாளே “மங்கள மதாகவே வந்து துறைசைதனில் வந்தடிமை கொண்டலிங்கம் வளமான கலைக்கு நிகரான சதுர்வேத மங்களம் இருந்த லிங்கம் தலம்-55 |