பக்கம் எண் :

866 திருமுறைத்தலங்கள்


     கங்கை பங்காளராய் வேதியர்க்காகவே
          காணிபறி கொண்ட லிங்கம்
     திங்களும் மும்மாரி பெய்திடவே குருந்தடியில்
          சிறப்புடன் வளர்ந்த லிங்கம்.”
      “சிவசங்கர குருதேசிக பூசித்த
          சிந்தை வடிகொண்ட சிவனே
     அங்க வேதனையினால் உங்களிடம் அபயமென்று
          அலறினேன் ஆதிசிவயோகமாது
     அடியனை ரட்சிக்க வரவேணும் இதுசமயம்
          ஆளுடை மகாலிங்கமே.
     மூவரும் முப்பத்து முக்கோடி தேவரும்
          முனிவரும் தஞ்சமெனவே
     முப்புரமெரித்த வழி அப்பனே கதியென்று
          மூலமே உமை நம்பினேன்

     ஏவலொடு வஞ்சனை மொரப்போடு
          எதிரி பகையாளி எல்லாம்
     என்முகம் கண்ட போதிலே திகைத்தோட
          ரவி கண்ட பனிபோலவே
     தாவிவரும் சூரனைவெல் கொண்டெரித் தகுரு
          ஷண்முகனை ஈன்ற பரனே

     தயவு வைத்துன்பாத தெரிசனம் கொடுத்தென்று
          சஞ்சலம் தீர்த்து வைப்பாய்
     அடைக்கலமே நம்பினேன் ஆதிசிவ யோகமா
          தரைப் பங்கில் கொண்டபரனே
     அடியனை ரட்சிக்க வரவேணு மிதுசமயம்
          ஆளுடை மகாலிங்கமே     (கவிக்குஞ்சரபாரதியார்)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. ஆத்மநாதசுவாமி திருக்கோயில்
     ஆவுடையார் கோயில் & Post - 614 618.
     ஆவுடையார் கோயில் வட்டம் - புதுக்கோட்டை மாவட்டம்