பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 867


2. தில்லை

சிதம்பரம்

     (தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில்
உள்ளது.)

                   
     பாடல்கள் :

     
சுந்தரத் திருநீறணிந்தும் மெழுகித்
          தூயபொன்சிந்தி நிதிபரப்பி
     இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்
          எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
     அந்தரம் கோன் அயன் தன்பெருமான்
          ஆழியான்நாதன் நல்வேலன் தாதை
     எந்தரம் ஆள் உமையாள் கொழு நற்கு
          ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
                              (திருப்பொற்சுண்ணம்)

     நாயேனைத்தன் அடிகள் பாடுவித்த நாயகனைப்
     பேயேனது உள்ளம் பிழை பொறுக்கும் பெருமையனைச்
     சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும்
     தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
                                   (திருக்கோத்தும்பீ)

     கனவேயும் தேவர்கள் காண்பரிய கனைகழலோன்
     புனவேய் அனைவளத் தோளியொடும் புகுந்தருளி
     நனவே எனைப்பிடித்தாட் கொண்டவா நயந்துநெஞ்சம்
     சினவேற்கண் நீர்மல்கத் தெள்ளேணம் கொட்டாமோ.
                                  (திருத்தெள்ளேணம்)

     தான்அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
     ஆனந்த வெள்ளத்தழுத்து வித்தான் காணேடீ
     ஆனந்த வெள்ளத்தழுத்துவித்த திருவடிகள்
     வானுந்து தேவர்கட்கோர்வான்பொருள்காண் சாழலோ
                                   (திருச்சாழல்)

     வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய்வாழ்த்த வைத்து
     இணங்கத் தன்சீறடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான்
     அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
     குணங்கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ.
                                      (திருப்பூவல்லி)