பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 871


     மேலும் சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி”
என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த
கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்
பட்டுள்ளது.

     மணிவாசகர் தம் திருவாசகத்துள் இத்தலத்தையும் பெருமானையும்
“அணி பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே”, “வெறிவாய் அறுகால்
உழுகின்ற பூம் பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே”, “பக்தரெலாம் பார்
மேல் சிவபுரம் போல் கொண்டாடும் உத்தரகோசமங்கயைூர்” எனப் பலவாறு
புகழ்ந்து பாடுகிறார்.

     நீத்தல் விண்ணப்பம் என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் அருளப்
பெற்றது. கீர்த்தித் திருவகவல், திருப்பொன்னூசல், திருத்தசாங்கம்,
திருப்பள்ளியெழுச்சி முதலிய பகுதிகளிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது.

     கீர்த்தித் திருவகவலில் “உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக
வேடம் காட்டிய இயல்பும்” என்று வருந்தொடர், இத்தலபுராணத்தில் 8ஆம்
சருக்கத்தில் சொல்லப்படும், ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம்
காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

     இதுபற்றியே இத்தலத்துப் பெருமானுக்கு “காட்சி கொடுத்த நாயகன்”
என்ற பெயரும் வழங்குகிறது. (இவ்வரலாறு இத்தலக் குறிப்பில் சஹஸ்ரலிங்கக்
கோயிலைப் பற்றி வருமிடத்தில் எழுதப்பட்டுள்ளது) இது தவிர, ‘மகேந்திரம்’
என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்று கொண்டு, இறைவன்
அம்பிகைக்கு உபதேசித்ததையே “மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம்
தோற்றுவித்து அருளியும்” என்ற தொடர் குறிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
இதற்கு ஆதாரமாக உ.வே.சா. நூல்நிலைய வெளியீடாகிய திருவாசக உரையை
இவர்கள் மேற்கோள் காட்டுகின்றனர்.

     இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார்.
இங்குள்ள சபை இரத்தினச்சபை எனப்படுகிறது.

     ‘மங்களேசுவரி பிள்ளைத்தமிழ்’ என்னும் நூல் திரு. வ.த.சுப்பிரமணியப்
பிள்ளையவர்களால் 1901லும் மறுபதிப்பாக 1956லும் வெளியிடப்பட்டுள்ளது.
‘உத்தரகோசமங்கைத் தலபுராணம்’ அச்சிடப்பட்டுக் கோயிலில் விற்பனைக்குக்
கிடைக்கிறது.

     இராமேஸ்வரம், உத்தரகோசமங்கை ஆகிய இருகோயில்களும் முதலில்
இலங்கையில் இருந்த கண்டி மகாராஜாவால் கட்டப்பட்டு,