“பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராதே படலம் என்கண் மறைப்பித்தாய் குழைவிரவு வடிகாதா கோயில் உளாயோயென்ன உழையுடையானுள்ளிருந்து உளோம் போகீ ரென்றானே.” “செய்வினை யொன்றறியாதேன் திருவடியே சரணென்று பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ பையரவா இங்கிருந்தாயோ என்னப் பரிந்து என்னை உய்யஅருள் செய்யவல்லானும் உளோம் போகீர் என்றானே.” “மான்திகழும் சங்கிலியைத் தந்துவரு பயன்கள் எல்லாம் தோன்ற அருள் செய்தளித்தாய் என்றுரைக்க உலகமெலாம் ஈன்றவனே வெண்கோயில் இங்கிருந்தாயோ என்ன ஊன்றுவதோர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே” (சுந்தரர்) -‘தேசூரன் கண்பார்க்க வேண்டுமெனக் கண்டு ஊன்றுகோல் கொடுத்த வெண் பாக்கத்து அன்பர் பெறும் வீறாப்பே.” (அருட்பா) “வாழி திருவூன்றீசன் வாழியுமை மின்னொளியாள் வாழி திருநாவலூர் வன்றொண்டர் - வாழி திரு வூன்றீச னாலயமும் போற்றும் பணி செய்தோர் தோன்றுகவே பத்திநெறி யெங்கும்.” (தனிப்பாடல்) அஞ்சல் முகவரி :- அ/மி. ஊன்றீஸ்வரர் திருக்கோயில் பூண்டி (நீர்த்தேக்கம்) - அஞ்சல் - 602 023. (வழி) திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம். |