| (4) கீழ்க்கோட்டூர் மணியம்பலம் (5) திருமுகத்தலை (6) திரைலோக்கியசுந்தரம் (7) திருப்பூவணம் (8) சாட்டியக்குடி (9) தஞ்சை இராசராசேச்சரம் (10) திருவிடைமருதூர் (11) திருவாரூர் (12) திருவீழிமிழலை (13) திருவாவடுதுறை (14) திருவிடைக்கழி (கோயில் எனப்படும் சிதம்பரத்திற்குத் திருவிசைப்பாப் பதிகங்கள் 15ம் திருப்பல்லாண்டுப் பதிகம் ஒன்றும் உள்ளன. ஏனைய தலங்கள் அனைத்தும் ஒவ்வொரு (திருவிசைப்பா) பதிகத்தைப் பெற்றுள்ளன. மொத்தப் பதிகங்கள் :- திருவிசைப்பா : 28, திருப்பல்லாண்டு : 1, ஆகமொத்தம் ஒன்பதாம் திருமுறையுள் 29 பதிகங்கள் உள்ளன. ஒன்பதாம் திருமுறைப் பாடல்கள் 365 எனத் தொகை கூறப்பட்டிருப்பினும் கிடைத்திருப்பவை 301. ஆக 64 பாடல்கள் ஏடுகளிற் சிதைந்திருத்தல் வேண்டும்.) இத்தலங்களுள் திருவிடைக்கழி, முருகப் பெருமான் தலமாகும். இத்தலத்துப் பதிகமும் முருகனைப் பற்றியதே. ஏனைய தலங்களுள், சிதம்பரம், திருப்பூவணம், திருவிடைமருதூர், திருவாரூர், திருவீழிமிழலை, திருவாவடுதுறை ஆகிய ஆறு தலங்கள் (தேவாரத்) திருமுறைத் தலங்களாகவும் விளங்குகின்றன. இவை நீங்கலாகவுள்ள தலங்கள் (1) கங்கை கொண்ட சோழேச்சரம் (2) களந்தை ஆதித்தேச்சரம் (3) கீழ்க்கோட்டூர் மணியம்பலம் (4) திருமுகத்தலை (5) திரைலோக்கிய சுந்தரம் (6) சாட்டியக்குடி (7) தஞ்சை இராசராசேச்சரம் (8) திருவிடைக்கழி முதலியவை (ஒன்பதாம் திருமுறையாகிய) திருவிசைப்பாத் தலங்களாகவே விளங்குகின்றன. பஞ்சபுராணம் பாடும் முறை அமைப்பில் திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டும் தனித்தனியே இடம் பெறுகின்றன. |