பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 885


     “களையா உடலோடு சேரமான் ஆரூரன்
     விளையா மதமாறா வெள்ளானை மேல்கொள்ள
     முளையா மதிசூடி மூவாயிரவரொடும்
     அளையா விளையாடும் அம்பலம்நின் ஆடரங்கே.”
                                (பூந்துருத்திநம்பி காடநம்பி)

     “பாரோர் முழுதும் வந்திறைஞ்சப்
          பதஞ்சலிக்கு ஆட்டுகந்தான்
     வாரார் முலையாள் மங்கைபங்கன்
          மாமறையோர் வணங்கச்
     சீரான்மல்கு தில்லைச் செம்பொன்
          அம்பலத்தாடுகின்ற
     கரரார்மிடற்ற எங்கண்டனாரைக்
          காண்பதும் என்று கொலோ.” (கண்டராதித்தர்)

     “வாளாமால் அயன் வீழ்ந்து
          காண்பரிய மாண்பிதனைத்
     தோளாரக் கையாரத்
          துணையாரத் தொழுதாலும்
     ஆளோ நீயுடையதுவும்
          அடியேன்உன் தாள்சேரும்
     நாளேதோ திருத்தில்லை
          நடம்பயிலும் நம்பானே. (வேணாட்டடிகள்)

     நேச முடையவர்கள்
          நெஞ்சுளேயிடங் கொண்டிருந்த
     காய்சின மால்விடையூர்
          கண்ணுதலைக் காமருசீர்த்
     தேசமிகு புகழோர்
          தில்லை மாநகர்ச் சிற்றம்பலத்து
     ஈசனை எவ்வுயிர்க்கும்
          எம்இறைவன் என்றேத்துவனே.” (திருவாலியமுதனார்)

     வாரணி நறுமலர் வண்டு கிண்டு
          பஞ்சமம் செண்பகமாலை மாலை
     வாரணி மனமுலை மெலியும் வண்ணம்
          வந்து வந்திவை நம்மை மயக்குமாலோ
     சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு
          தில்லையம்பலத் தெங்கள் செல்வன் வாரான்
     ஆரெனை அருள்புரிந்து அஞ்சல் என்பார்
          ஆவியின் பரமென்றன் ஆதரவே.” (புருடோத்தம நம்பி)