பக்கம் எண் :

886 திருமுறைத்தலங்கள்


     அறவனே அன்று பன்றிப் பின்ஏகிய
     மறவனே எனைவாதை செய்யேல் எனும்
     சிறைவண் டார்பொழில் தில்லையுளீர் எனும்
     பிறைகுலாம் நுதற்பெய் வளையே.       (சேதிராயர்)

                    திருப்பல்லாண்டு

     சொல்லாண்ட சுருதிப் பொருள்
          சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
     சில்லாண்டிற் சிதையுஞ்சில
          தேவர் சிறுநெறி சேராமே
     வில்லாண்ட கனகத்திரள்
          மேருவிடங்கன் விடைப்பாகன்
     பல்லாண் டென்னும் பதங்கடந்
          தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
                                      (சேந்தனார்)

2. கங்கைகொண்ட சோழேச்சரம்

கங்கைகொண்ட சோழபுரம்

     திருவிசைப்பா பாடல் பெற்ற தலம்.

     கோயில் : கங்கை கொண்ட சோழேச்சரம். ஊர் : கங்கை கொண்ட
சோழபுரம். திருச்சி மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் ஜயங்கொண்ட
சோழபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

     தற்பொழுது சிற்றூராக உள்ளது இத்தலம். இங்குப் பயணிகள்
தங்குவதற்கான வசதிகள் ஏதுமில்லை. பிற்காலச் சோழர்களுக்குத் தலைநகராக
விளங்கிய இத்தலைநகரின் பகுதிகளே, இன்றுள்ள (1) உட்கோட்டை
(2) மாளிகைமேடு (3) ஆயிரக்கலம் (4) வாணதரையன் குப்பம்
(5) கொல்லாபுரம் (6) வீரசோழ நல்லூர் (7) மெய்க்காவல்புத்தூர்