நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விசேஷகால வழிபாடுகளும் நடைபெறுகின்றன. “தளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்பு அம்பலச் சடைவிரிந்து அலையெறி கங்கைத் தெளிரொளி மணிநீர்த் திவலைமுத்து அரும்பித் திருமுகம் மலர்ந்து சொட்டு அட்டக் கிளரொளி மணிவண்டு அறைபொழிற் பழனம் கெழு வுகம்பலை செய்கீழ்க் கோட்டூர் வளரொளி மணியம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனங்கலந்தானே.” “துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல கண்டமும் குழையும் பவளவாய் இதழும் கண்ணுதல் திலகமும் காட்டிக் கெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனங் கெழுவு கம்பலை செய்கீழ்க் கோட்டூர் வண்டறை மணியம்பலத்துள் நின்றாடும் மைந்தன் என் மனங்கலந்தானே.” அஞ்சல் முகவரி :- அ/மி. மணியம்பலநாதர் திருக்கோயில் கீழ்க்கோட்டூர் - கோட்டூர் அஞ்சல் - 614 708. (வழி) திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம். 5. திருமுகத்தலை பன்னத்தெரு | தஞ்சை மாவட்டத்திலுள்ள தலம். மக்கள் வழக்கில் பன்னத்தெரு என்று வழங்குகிறது. திருத்துறைப் பூண்டி- நாகப்பட்டினம் / வேளாங்கண்ணி சாலையில் 4 கி.மீ. சென்று ‘கொக்காலடி’ என்னும் ஊரையடைந்து; அங்கிருந்து தலம்-57 |