பக்கம் எண் :

90 திருமுறைத்தலங்கள்


     சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியது. மூலத் திருமேனி சிவலிங்கம். சதுர
ஆவுடையார்.   வெளியில்   விநாயகர்  கோயிலும்,   அடுத்துப் பக்கத்தில்
சுப்பிரமணியர் கோயிலும், அதன்  பக்கத்தில் அம்பாள் கோயிலும் உள்ளன.
எல்லாம் கிழக்கு நோக்கிய சந்நிதிகள்.

     சிவாசாரியரின் ஆர்வத்தால் நித்திய வழிபாடு நடைபெறுகிறது.
 

    “முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ்சோலை
     வெள்ளின்மேல் விடுகூறைக் கொடிவிளைந்த
     கள்ளின்மேய அண்ணல் கழல்கள் நாளும்
     உள்ளுமேல் உயர்வெய்தல் ஒருதலையே.”

    “திகை நான்கும் புகழ் காழிச் செல்வமல்கு
     பகல்போலும் பேரொளியான் பந்தனல்ல
     முகைமேவு முதிர்சடையான் கள்ளிலேத்தப்
     புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.”           (சம்பந்தர்)

                                    -பண்பார்க்கும்
     நள்ளிப் பதியே நலந்தரு மென்றன்பர் புகும்
     கள்ளிற் பதிநங் கடப்பாடே.”          (அருட்பா)


அஞ்சல் முகவரி :-


    அ/மி. சிவானந்தேஸ்வரர் திருக்கோயில்
     திருக்கண்டலம் & அஞ்சல் - 601 103.
     (வழி) வெங்கல் - S.O.
     திருவள்ளூர் வட்டம் - மாவட்டம்.

19. திருக்காளத்தி

ஸ்ரீ காளஹஸ்தி

     தொண்டை நாட்டுத்தலம்.

     இன்று   ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்துள்ளது.
மக்கள் வழக்கில் ‘காளாஸ்திரி’ என்று வழங்கப்படுகிறது. ரேணிகுண்டா -
கூடூர் புகைவண்டி   மார்க்கத்தில்  உள்ள  இருப்புப்பாதை   நிலையம்.
திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 110