3. தேவாரத் தல வணக்கம் திருச்சிற்றம்பலம் | ஏகம் பத்துறை எந்தாய் போற்றி கச்சிமேற் றளியுறை கடலே போற்றி ஓண காந்தன் தளியாய் போற்றி கச்சிஅ நேகதங் காவதா போற்றி கச்சிநெறிக் காரைக் காடா போற்றி குரங்கணில் முட்டங் குலவினாய் போற்றி மாகறல் வாழும் மருந்தே போற்றி ஓத்துர் மேவிய ஒளியே போற்றி வன்பார்த்தான் பனங்காட் டூரா போற்றி திருவல்லம் மேவிய தீவணா போற்றி மாற்பே றாள்உமை மணாளா போற்றி திருவூ றல்வளர் தேவே போற்றி இலம்பையங் கோட்டூர் ஈசா போற்றி விற்கோ லந்துறை வீரா போற்றி ஆலங் காட்டெம் அடிகள் போற்றி பாசூர் அமர்ந்த பசுபதீ போற்றி வெண்பாக் கத்துறை விமலா போற்றி கள்ளில் மேய கனியே போற்றி காளத்தி நாதநின் கழலிணை போற்றி ஒற்றி யூருடைய ஒருவ போற்றி வலிதா யம்உறை வள்ளல் போற்றி வடதிரு முல்லை வாயிலாய் போற்றி வேற்காட்டு வேத வித்தகா போற்றி மயிலைக் கபாலீச் சரத்தாய் போற்றி வான்மியூ ரமர்ந்த வாழ்வே போற்றி கச்சூ ராலக் கோயிலாய் போற்றி இடைச்சுரம் இருந்த எழில்வண போற்றி திருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி அச்சிறு பாக்கம் அமர்ந்தாய் போற்றி வக்கரை அமர்ந்த வரதா போற்றி அரசிலி நாதா ஐயா போற்றி இரும்பைமா காளத் திறைவா போற்றி நெல்வா யில்அரத் துறையாய் போற்றி பெண்ணா கடத்துப் பெரும போற்றி கூடலை யாற்றூர்க் கோவே போற்றி |