பக்கம் எண் :

924 திருமுறைத்தலங்கள்


     எருக்கத்தம் புலியூர் எந்தாய் போற்றி
     திருத்தினை நகரச் சிவனே போற்றி
     சோபுர மேவிய சொக்கா போற்றி
     அதிகைவீ ரட்டத் தழகா போற்றி
     நாவலூர் மேவிய நம்பா போற்றி

     முதுகுன் றமர்ந்த முனிவா போற்றி
     நெல்வெணெய் மேவிய நிருத்தா போற்றி
     கோவல்வீ ரட்டக் கோமான் போற்றி
     அறையணி நல்லூர் அரசே போற்றி
     இடையா றிடையமர் ஈசா போற்றி

     வெண்ணெய்நல் லூருறை மேலோய் போற்றி
     துறையூர் அமர்ந்த தூயோய் போற்றி
     வடுகூர் அடிகள் மாணடி போற்றி
     திருமாணி குழிவளர் தேவே போற்றி
     பாதிரிப் புலியூர்ப் பரம போற்றி

     முண்டீச் சரத்து முதல்வா போற்றி
     புறவார் பனங்காட் டூரா போற்றி
     திருஆ மாத்தூர்த் தேவே போற்றி
     அண்ணா மலைஎம் அண்ணா போற்றி
     தென்தில்லை மன்றினுள் ஆடீ போற்றி

     வேட்கள நன்நகர் மேயாய் போற்றி
     நெல்வா யில்வளர் நிதியே போற்றி
     கழிப்பா லைஉறை கரும்பே போற்றி
     நல்லூர்ப் பெருமண நம்பா போற்றி
     மயேந்திரப் பள்ளி மன்னா போற்றி
     தென்திரு முல்லை வாயிலாய் போற்றி
     கலிக்கா மூர்வளர் கண்ணே போற்றி
     சாய்க்கா டினிதுறை சதுரா போற்றி
     பல்லவ னீச்சரப் பரனே போற்றி
     வெண்கா டுகந்த விகிர்தா போற்றி

     கீழ்த்திருக் காட்டுப் பள்ளியாய் போற்றி
     குருகா வூருறை குணமே போற்றி
     காழியுள் மேய கடலே போற்றி
     கோலக் காவிற் கோவே போற்றி
     வேளூர் மேவிய வித்தகா போற்றி