| கண்ணார் கோயில்வாழ் கனியே போற்றி கடைமுடிப் பரமநின் கழல்கள் போற்றி நின்றியூர் வளரும் நிதியே போற்றி திருப்புன் கூரமர் திருவே போற்றி நீடூர் நிருத்தநின் நீளடி போற்றி அன்னி யூர்வளர் அரனே போற்றி வேள்விக் குடிவளர் வேதா போற்றி எதிர்கொள் பாடிஎம் இறைவா போற்றி மணஞ்சேரி வார்சடை மணாளா போற்றி குறுக்கைவீ ரட்டக் குழகா போற்றி கருப்பறி யல்நகர் காப்பாய் போற்றி குரக்குக் காவிற் குருவே போற்றி வாழொளி புத்தூர் வாழ்வே போற்றி மண்ணிப் படிக்கரை மணியே போற்றி ஓமாம் புலியூர் ஒருவனே போற்றி கானாட்டு முள்ளூர்க் கடவுளே போற்றி நாரையூர் நன்நகர் நலமே போற்றி கடம்பூர் மேவிய விடங்கா போற்றி பந்தணை நல்லூர்ப் பசுபதீ போற்றி கஞ்சனூர் ஆண்டகற் பகமே போற்றி கோடிக் காவுடைக் கோவே போற்றி திருமங் கலக்குடித் தேனே போற்றி பனந்தாள் தாடகேச் சரனே போற்றி ஆப்பா டிப்பதி அமலா போற்றி சேய்ஞலூர் உறையுஞ் செல்வா போற்றி திருந்துதே வன்குடித் தேவா போற்றி வியலூர் இருந்தருள் விமலா போற்றி கொட்டையூ ரிற்கோ டீச்சரா போற்றி இன்னம்பர் ஈசநின் இணையடி போற்றி புறம்பயப் பதிவாழ் புண்ணியா போற்றி
விசய மங்கை வேதியா போற்றி திருவை காஉறை சிவனே போற்றி வடகுரங் காடு துறையாய் போற்றி பாங்கார் பழனத் தழகா போற்றி சீரார் திருவை யாறா போற்றி |