| நெய்த்தா னத்துநெய் ஆடியே போற்றி பெரும்புலி யூர்ப்பெரு மானே போற்றி மழபாடி வயிரத் தூணே போற்றி பழுவூர் மேவிய பண்பா போற்றி கானூர் மேயசெங் கரும்பே போற்றி அன்பிலா லந்துறை அரசே போற்றி வடகரை மாந்துறை வள்ளால் போற்றி திருப்பாற் றுறையுறை தேவே போற்றி ஆனைக் காவுறை ஆதீ போற்றி பைஞ்ஞீலி அண்ணல்நின் பாதம் போற்றி பாச்சிலாச் சிராமப் பரனே போற்றி ஈங்கோய் மலைஎம் எந்தாய் போற்றி வாட்போக்கி மலையுறை வாழ்வே போற்றி கடம்பந் துறைவளர் கடலே போற்றி பராய்த்துறை மேவிய பரனே போற்றி கற்குடி மாமலைக் கண்ணுதல் போற்றி முக்கீச் சரத்து முதல்வா போற்றி சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி எறும்பியூர் இருந்த எம்மான் போற்றி நெடுங்களம் இனிதமர் நிமலா போற்றி மேலைக் காட்டுப் பள்ளியாய் போற்றி ஆலம் பொழிலுறை அரனே போற்றி திருப்பூந் துருத்தித் தேசிக போற்றி கண்டிவீ ரட்டக் கரும்பே போற்றி சோற்றுத் துறைவளர் தொல்லோய் போற்றி வேதி குடியுறை விஜய போற்றி தென்குடித் திட்டைத் தேவே போற்றி திருப்புள்ள மங்கைத் திருவே போற்றி சக்கரப் பள்ளிஎம் சங்கரா போற்றி கருகா வூருறை கடம்பா போற்றி திருப்பா லைத்துறைச் செல்வா போற்றி நல்லூர்ப் பெருமநின் நற்பதம் போற்றி ஆவூர்ப் பசுபதீச் சரனே போற்றி சத்தி முற்றச் சதுரா போற்றி பட்டீச் சரமுறை பரமா போற்றி |