பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 927


     பழையா றைவட தளியாய் போற்றி
     வலஞ்சுழி மேவிய வரதா போற்றி
     குடமூக் கமர்கும் பேசா போற்றி
     கீழ்க்கோட் டத்தெங் கூத்தா போற்றி
     குடந்தைக் காரோ ணத்தாய் போற்றி

     நாகேச் சரம்வாழ் நாதா போற்றி
     இடைமரு துறையும் எந்தாய் போற்றி
     தென்குரங் காடு துறையாய் போற்றி
     நீலக் குடியுறை நிருத்தா போற்றி
     வைகல் மாடக் கோயிலாய் போற்றி

     நல்லம் நடம்பயில் நாதா போற்றி
     கோழம் பத்துறை கோவே போற்றி
     ஆவடு தண்துறை அமரா போற்றி
     துருத்தி ஈசநின் துணையடி போற்றி
     அழுந்தூர் ஆளும் அரசே போற்றி

     மயிலா டுந்துறை மணியே போற்றி
     திருவிள நகர்உறை திருவே போற்றி
     பறியல்வீ ரட்டப் பரமா போற்றி
     செம்பொன் பள்ளிச் செல்வா போற்றி
     நனிபள்ளி வளரும் நம்பா போற்றி

     வலம்புரம் மன்னிய வாழ்வே போற்றி
     தலைச்சங் காடமர் தத்துவ போற்றி
     ஆக்கூர் அமர்ந்த அம்மான் போற்றி
     கடவூர்க் காலவீ ரட்டா போற்றி
     கடவூர் மயானக் கடவுளே போற்றி

     வேட்டக் குடியின் மேயோய் போற்றி
     திருத்தெளிச் சேரிச் சிவனே போற்றி
     தரும புரம்வளர் தாயே போற்றி
     நள்ளா றுடைய நாதா போற்றி
     கோட்டா றமருங் குழகா போற்றி

     அம்பர் பெருந்திருக் கோயிலாய் போற்றி
     அம்பர்மா காளத் தரனே போற்றி
     மீயச் சூருறை விண்ணவ போற்றி
     மீயச் சூரிளங் கோயிலாய் போற்றி
     திலதைப் பதிவாழ் திலகமே போற்றி