| பாம்புர நன்நகர்ப் பரமனே போற்றி சிறுகுடிப் பிறைமுடிச் செல்வா போற்றி விண்ணிழி வீழி மிழலையாய் போற்றி வன்னியூர் மேவிய மைந்தா போற்றி கருவிலி அமருங் கண்ணே போற்றி பேணு பெருந்துறைப் பெம்மான் போற்றி நறையூர் சித்தீச் சரனே போற்றி அரிசிற் கரைப்புத் தூரா போற்றி செழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி கலைய நல்லூர்க் கடவுளே போற்றி கருக்குடி அண்ணல்நின் கழல்கள் போற்றி திருவாஞ் சியம்வளர் தேவே போற்றி நன்நிலத் துப்பெருங் கோயிலாய் போற்றி கொண்டீச் சரத்துக் கோவே போற்றி திருப்பனை யூர்வளர் தேவே போற்றி விற்குடி வீரட்டம் மேயாய் போற்றி புகலூர் மேவிய புண்ணியா போற்றி புகலூர் வர்த்தமா னீச்சரா போற்றி இராமன தீச்சரத் திறைவா போற்றி பயற்றூ ருறையும் பண்பா போற்றி செங்காட் டங்குடிச் சேவகா போற்றி மருகற் பெருமநின் மலரடி போற்றி சாத்த மங்கைச் சம்புவே போற்றி நாகைக்கா ரோணம் நயந்தாய் போற்றி சிக்கல் நகர்வளர் செல்வா போற்றி கீழ்வே ளூராள் கேடிலீ போற்றி தேவூர் ஆதிநல் தேனே போற்றி பள்ளிமுக் கூடற் பரனே போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி ஆரூர் அரநெறி அப்பா போற்றி பரவையுண் மண்தளிப் பரனே போற்றி விளமர் உகந்த வித்தகா போற்றி கரவீ ரச்சங் கரனே போற்றி பெருவே ளூருறை பெரும போற்றி தலையா லங்கா டமர்ந்தாய் போற்றி |