| குடவாயில் மன்னிய குருவே போற்றி சேறைச் செந்நெறிச் செல்வா போற்றி நாலூர் மயான நாடகா போற்றி கடுவாய்க் கரைப்புத் தூரா போற்றி திருஇரும் பூளைத் தேவே போற்றி அரதைப் பெரும்பதி அமர்ந்தாய் போற்றி அவளிவள் நல்லூர் அரசே போற்றி பரிதி நியமப் பரனே போற்றி வெண்ணிவாழ் விமலநின் மெல்லடி போற்றி பூவனூர்ப் புனிதநின் பொன்னடி போற்றி பாதா ளீச்சரப் பரமா போற்றி திருக்களர் மேவிய தேவே போற்றி ஓங்குசிற் றேமத்து ஒருவா போற்றி உசாத்தா னத்தமர் உறவே போற்றி இடும்பா வனத்துறும் இறைவா போற்றி கடிக்குளத் துறைகடல் அமுதே போற்றி தண்டலை நீணெறித் தாயே போற்றி கோட்டூர் மேவிய கொழுந்தே போற்றி வெண்டுறை மேவிய வேதா போற்றி கொள்ளம் பூதூர்க் கோவே போற்றி பேரெயில் பெருமநின் பெய்கழல் போற்றி கொள்ளிக் காடமர் கொற்றவ போற்றி திருத்தெங் கூர்வளர் தேனே போற்றி நெல்லிக் காஉறை நித்திய போற்றி நாட்டியத் தான்குடி நம்பீ போற்றி திருக்கா றாயில் தியாகா போற்றி கன்றாப் பூர்நடு தறியே போற்றி வலிவலம் வந்தருள் வரதா போற்றி கைச்சின மேவிய கண்ணுதல் போற்றி கோளிலி உறையுங் கோவே போற்றி வாய்மூ ரடிகள்இன் மலர்ப்பதம் போற்றி மறைக்கா டுறையும் மணாளா போற்றி அகத்தியான் பள்ளி ஐயா போற்றி கோடிக் கோயிற் குழகா போற்றி ஆடக மதுரை அரசே போற்றி |