| ஆப்ப னூர்வளர் ஐயா போற்றி திருப்பரங் குன்றிற் செல்வா போற்றி ஏடகத் தெந்தைநின் இணையடி போற்றி கொடுங்குன் றமருங் கோவே போற்றி திருப்புத் தூர்த்திருத் தளியாய் போற்றி திருப்புன வாயிலெம் செல்வா போற்றி மால்செய்ரா மேச வாழ்வே போற்றி ஆடா னையுறை ஆதீ போற்றி கானப் பேருறை காளாய் போற்றி பொருப்பமர் பூவணத் தரனே போற்றி கழியல் வளருந் துணைவா போற்றி குற்றா லத்தெங் கூத்தா போற்றி நெல்வே லிய்யுறை செல்வா போற்றி அவிநா சிவ்வளர் அரனே போற்றி முருகன் பூண்டி முதல்வா போற்றி திருநணா வளரும் திருவே போற்றி கொடிமா டச்செங் குன்றாய் போற்றி வெஞ்சமாக் கூடல் விகிர்தா போற்றி பாண்டிக் கொடுமுடிப் பழையோய் போற்றி கருவூர் ஆனிலைக் கண்மணீ போற்றி அஞ்சைக் களத்துறை அப்பா போற்றி கோலக் கோகர்ணக் கொழுந்தே போற்றி திருப்பருப் பதத்துத் தேவே போற்றி இந்திர நீல மலையாய் போற்றி அநேகதங் காவதம் அமர்ந்தாய் போற்றி கேதா ரக்கிரிக் கிழவோய் போற்றி நொடித்தான் மலையுறை நிமலா போற்றி கோணமா மலைகுடி கொண்டாய் போற்றி அண்ணல்கே தீச்சரத்து அடிகள் போற்றி திருவிடை வாய்வளர் தேவா போற்றி கிளியன்னவூர் வாழ் தேவே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் |