பக்கம் எண் :

936 திருமுறைத்தலங்கள்


5. பயணம் செய்வோர் / பேருந்து
ஓட்டுநர்கள் சிந்தனைக்கு


     1. மழைக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டாம். சோழநாட்டில் -
குறிப்பாக உட்புறப் பாதைகள் மழைக்காலத்திற்கு ஏற்றவையல்ல.

     2. இயன்றவரையில் தனித்துப் போகாமல் திருக்கூட்டமாகவே,
தனிப்பேருந்து ஏற்பாடு செய்து கொண்டே செல்வது நல்லது ;
உட்புறமாகவுள்ள பல தலங்களுக்கு, நெடுங்சாலையிலிருந்து நடந்தும்,
நகரப்பேருந்துகள் மூலமாகவும் செல்ல வேண்டியிருக்கும். நடந்து
செல்வதானாலும், நகரப்பேருந்துகள் சென்று திரும்புகிற வரையில் காத்திருக்க
வேண்டியிருக்குமாதலாலும் காலம் வீணே விரயமாகும். சில சமயங்களில் ஒரு
நாளில் ஓரிரு தலங்களை மட்டும் பார்க்கும்படியான நிலைமையும் ஏற்படும்.
எனவே திருக்கூட்டமாக, தனிப் பேருந்தில் செல்வதே நல்லது.

     3. நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர்க்குத் துணையாக
ஆங்காங்குச் சாலைகளில் சிமெண்டு பெயர்ப் பலகைகள் வைக்கப் பட்டுள்ளன.
இவற்றுள் சிலவிடங்களில் இப்பலகைகள் மீதே சுவரொட்டிகளை
ஒட்டியிருப்பர். எனவே ஆங்காங்கு நின்று வழி கேட்டறிந்து செல்லவேண்டும்.
 
    4. தஞ்சை மாவட்டத்தில் ஒரு ஊருக்கே பல வழிகள் இருக்கும்.
இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ள வழிகளேயன்றி வேறு பாதைகளும் இருப்பின்,
விவரமறிந்த ஓட்டுநர்கள் அவ்வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

     5. மண்சாலைகளிலும், ஒற்றைச் சாலைகளிலும் (Single Roads)
செல்லும்போது ஓட்டுநர்கள் விழிப்புடன் ஓட்ட வேண்டும். பேருந்து செல்லாது
என்று நினைக்குமிடங்களில் அதை நிறுத்தி விட்டு அன்பர்களை நடந்து
செல்லுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அன்பர்களும் இதற்கு இசைய
வேண்டும். பேருந்து போகாது என்று நினைக்கும் சாலைகளில் ஓட்டுநர்கள்
தேவையற்ற முறையில் துணிச்சலைக் காட்டுவது நல்லதன்று.

     6. திருமுறைத் தல யாத்திரைக்கு வரும் பேருந்து ஓட்டுநர்கள்
இப்பயணத்தை மற்ற சொகுசுப் பயணம் போல நினைக்காமல், இதன்
உள்ளுணர்வைப் புரிந்துகொண்டு அன்பர்களிடம் முகஞ்சுளிக்காமல் ஓட்ட
வேண்டும். வளைவுகள் உள்ள உட்புறப் பாதைகள்