11. தலங்களைத் தரிசிக்குங் காலத்திலும் நேரே கோவிலுக்குள் சென்றுவிடாமல், ராஜகோபுர வாயிலில் எல்லோரும் நின்று சிவநாம மகுடஞ் சொல்லி, உட்சென்று, விநாயகரைத் தொழுது முறையாக வலம் வந்து, சந்நிதிகளைத் தொழுது, தலப்பதிகங்களை ஓதி வழிபட வேண்டும். அன்பர்கள் தேவாரம் அடங்கன்முறை நூலை உடன் கொண்டு செல்வதும், ஓதுவார்மூர்த்தியை அழைத்துச் செல்வதும் அவசியம். 6. மாகேசுவர பூஜை - வேண்டுதல். ஆசீர்வாதம் அநாதி முதற்பெருங்கடவுளாகிய சிவபெருமான் உயிர்கள் வழிபட்டு உய்யும் பொருட்டுத் திருமேனி தாங்கி எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்கள் அனைத்திலும், நித்திய நைமித்திக வழிபாடுகளெல்லாம் வேத சிவாகமப்படி சிறப்பாக நடந்துவரும் பொருட்டு அநுக்ரஹம் செய்க - ஹரஹர ஹரஹர விபூதி, உருத்திராக்கதாரணம், பஞ்சாட்சர ஜபம், வேத சிவாகமப் படனம், தேவாரத் திருமுறைப் பாராயணம், ஆன்மார்த்த சிவபூஜை ஆகிய சிவபுண்ணியச் செயல்கள் நாடெங்கும் பரவி ஓங்கும் பொருட்டு அநுக்ரஹம் செய்க. - ஹரஹர ஹரஹர மாதம் மும்மழை தவறாமல் பெய்து, தான்யம் முதலிய எல்லா வளங்களும் செழித்தோங்கும் பொருட்டு அநுக்ரஹம் செய்க - ஹரஹர ஹரஹர அரசநீதி தவறாமல் செங்கோல் நடத்தி வரும் பொருட்டு அநுக்ரஹம் செய்க. - ஹரஹர ஹரஹர இந்தத் தானத்திலே எப்போதும் அடியார்களுக்கு மாகேஸ்வர பூஜை நடந்துவரும் பொருட்டு வளங்களையளித்து அநுக்ரஹம் செய்க. - ஹரஹர ஹரஹர சிவபூசைச் செல்வர் . . . . . . . . . அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தார், உறவினர் ஆகியோர்களுக்கும் நோயற்ற வாழ்வும், நிறைவான செல்வமும், தேக ஆரோக்கியமும், நீளாயுளும், குருலிங்கசங்கம பக்தியும், சிவஞானமும், மேன்மேலும் பெருக அநுக்ரஹம் செய்க. - ஹரஹர ஹரஹர அடியேங்களுக்கு நல்லபுத்தி உண்டாகும்பொருட்டு அநுக்ரஹம் செய்க. - ஹரஹர ஹரஹர அடியார்கள் அனைவரும் திருவமுது செய்தருளுக. |