பக்கம் எண் :

104துரை-மாலிறையன்

அனைவரையும் வியக்க வைத்தார்

அரியராம் வீர ராக அகம்மது திகழ்வாரேனும்
உரியபே ரழிவைத் தங்கள் உள்ளத்தால் விரும்பார் அம்மா!
தெரிவதாம் அமைதியால்தான் சிறக்குமிவ் வுலகம்என்று
விரிவதோர் வாய்மைபேசி வியக்கவைத்தாரே அம்மா! 19

அடிமைத் தனத்தைப் போக்கியவர்

பெரியோரை வியத்தல் செய்யார்; பெருமைஇல் லாதா ரையும்
சிறியோராய் இகழ்தல் செய்யாச் செம்மையோர் அவரேஅம்மா!
உரியஓர்அடிமை தன்னை உரையாலும் வருத்திடாமல்
அரியராய்ப் போற்றுகென்றே அறிவித்த அரியோர் அம்மா! 20

பெண்களின் பெருமை காத்தவர்

“பெண்களின் பெருமை ஒன்றே பேசிய பெருமான் அம்மா!
கண்களைப் போலப் பெண்ணைக் காத்திடு கென்றார் அம்மா!
எண்களைக் கடந்து மாண்பை ஏந்தினர் பெண்கள் என்று
நுண்கலைப் பெண்கள் மாண்பை நுவன்ற சீர்ப்பெரியார் அம்மா! 21

புன்மையே சிந்தியாதார்

“உண்மையே உருவமாக ஒளியுடன் வந்தார் மண்ணில்
விண்ணினைக் காண வந்த வியன்திரு மகனார் அம்மா!
புன்மையே சிந்தியாத புகழ்மனம் கொண்டார் ஈகை
வண்மையே வாழ்க்கை என்ற வள்ளலே ஆவார் அம்மா!” 22

அம்மையின் காதல் முற்றியது

இனியவன் மைச றாதான் இயம்பிய வற்றைக் கேட்டுக்
கனியிதழ்க் கதீசா நல்லார் கலங்கிய நிலை மறந்து
தனியதாய்த் தவித்த சேய்தன் தாயினைக் கண்டால் போல
நனிமகிழ் வுற்றுக் காதல் நட்பிலே முதிர்ச்சி கொண்டார். 23

அவர் நினைவாகவே உறங்கினார்

தாலாட்டும் தமிழ்ப்பண் கேட்டுத் தவழும் சேய் உறங்கல் போல
மேலோட்ட மாக அண்ணல் மேன்மைமை சறாவும் கூற
வேலாட்டம் விழிகள் கொண்ட வேதனை சுமந்த நல்லார்
பாலாட்டம் முகத்தைக் காட்டிப் படுத்தனர் உறங்கினாரே. 24