இயற்கைகள்
எல்லாம் வணங்கும்
அருந்துணையார்
உடன்ஏக யீறாக்குன் றத்தில்
அரியபகற்
பொழுதெல்லாம் தவமே ஆற்றி
வருந்தலைவர் முன்வானோர் வருகை
தாரா
வகையதனால் பகல்தங்கி இரவு வேளை
பொருந்துதனி
இல்லத்தில் பொருந்தி வாழப்
புறப்படுவார்
வழிகாணும் திணைகள் எல்லாம்
ஒருங்கோடு “சலாம்” செய்தே அமைதி
கூறும்
ஒளிப்பெருமான் கேட்டவுடன் வியப்புக் கொள்வார்; 6
பலப்பல
வகையாய்க் கனவு கண்டார்
படிப்படியாய்
இறையுணர்வு தோற்று விக்கும்
பரம்பொருளின்
அருட்செயலால் இரவு தோறும்
நெடிய
கனாப் பலப்பலவும் தெரியக் கண்டார்
நிறைமனத்துப்
பெரியோர்கள் பரிவும் கொண்டார்
கொடிய
கனாக் கண்டதிலை நல்ல கொள்கை
கொண்ட
கனா எதிர்நாளில் வரப்போம் தீமை
கடியஅன்பு
கனியும்கனா இவ்வா றான
கருத்துள்ள கனாக்கண்டார் இறைவ னாலே! 7
ஆதம் நபி
தோன்றி 6123 ஆண்டுகளுக்குப் பின்
முதல்ஆதம்
நபிதோன்றி மூவி ரண்டு
முறைபத்து
நூறுநூற்றி ருபத்து மூன்றில்
இதயத்தை முப்போதும் இறைமேல்
வைத்த
இனியவரின் அகவைநாற் பதுவும் ஆக
முதிர்
அரபிக் காலமெனும் ரமலான் திங்கள்
முகிழ்காரி
நாளன்றே இரவுப் போதில்
கதிர்பரப்பும்
ஒளிமுகத்தார் அண்ணல் யீறாக்
கவின்குன்றில்
தவம் செய்யச் சென்றி ருந்தார்; 8
|