பக்கம் எண் :

116துரை-மாலிறையன்

மானிடர்போல் நின்றார்

விண்ணுடன்சீர் மண்ணுலகும் புகழ்ந்து வாழ்த்த

விளங்குபுகழ்த் திருக்குர்ஆன் அருளப் பட்ட

பண்ணுடையீர்! இதுவரையில் எவர்க்கும் கிட்டாப்

பட்டத்தை இனியாரும் பெறுதற் கில்லை

மண்ணுடைய தூயவரும் நீரே” என்றும்

மலர்வாயால் செபுறயீல் சிறக்கக் கூறித்

“தண்ணுடைய மறைமொழியை ஓது” மாறு

தம்முடலை மானிடர்போல் குறுக்கி நின்றார். 15

நான் கல்லாதவன்; எவ்வாறு ஓதுவேன்?

துணியதன்மேல் சுடர்ஒளிசெய் எழுத்தைக் காட்டித்

“துய்யவரே! ஓது” கென நல்லார் கூறத்

தணிவாகப் பெருமானார் “ஐய யானோ

தகவில்லேன் கல்வியிலேன்” என்று சொன்னார்;

மணிஒளியார் அண்ணலினைத் தழுவி நெஞ்சால்

மறுபடியும் ஓதுகென வேண்டி மீண்டும்

பணிவுரையே உரைத்தார்; பின் மூன்றாம் போதில்

பரமன்அரு ளாலே நீர் படிக்க” என்றார். 16

மீண்டும் மீண்டும் மார்போடு இறுக்கினார்

இருகையால் மார்போடு மார்பி ணைத்த

இறுக்கத்தால் இருவர்தம் மார்பு தாமும்

ஒருங்கொன்றாய் ஆனதுபோல் ஆகி நின்ற

ஒளிமகனார் மார்பதுதான் சிவந்தி ருக்கப்

பெருமகனார் உள்ளமெலாம் இறை உணர்வே

பெருகிவர வானோர்கள் கோமான் தம்மை

அருமையுடன் பார்த்தவராய்“ஐய யானும்

அடியேன்ஈங்(கு) எதைஓத வேண்டும்” என்றார். 17