|
நீரே பேறு
பெற்றீர்
ஆண்டவனின்
அருள்பெற்றீர்! அரியீர்! நீவிர்
அருள் வானின் செபுறயீல் வருகை
தன்னை
ஆண்டந்த
மலையகத்தில் கண்டுள் ளீர்கள்;
அவ்விறைவன்
ஆணையினால் நபிப்பட்டத்தை
ஈண்டுவந்து
வழங்கியுளார் திருக்குர் ஆனை
எழிலாக
ஓதிடவும் கற்பித்துள்ளார்
நீண்ட புகழ்ப் பேறெல்லாம் பெற்றீர்
என்றே
நிறைநெஞ்சர் வரக்காவும் உரைத்துப் பின்னே; 30
மூன்று முறை
நாட்டை நீங்கிச் செல்வீர்
மும்முறை
அந் நன்முறையார் இறுக்கி உம்மை
முறையாகத்
தழுவியுளார்; ஆத லாலே
மும்முறை இவ் வூரார்கள் இடுக்கண்
செய்து
முறையற்று நல்லூரை நீங்கச்
செய்வார்
எம்முறைசெய் இடராலும் குலைய மாட்டீர்”
எனச்சொன்ன வரக்காவை நோக்கி அண்ணல்,
“செம்முறையார்
செய்கின்ற வினைகளாலே
தீமைவரும்
வழிஉண்டா?” என்று கேட்டார். 31
நீரே திருத் தகைமை
பெற்றவர்
அருமறைகள் பல உணர்ந்த பெருமை யாலே
அகம்கவரக்
கேட்டபெருமானை நோக்கித்
“திருமறையின் நாயகரே! ஈங்கு
வந்த
திகழ் நபிகள் அனைவருமே துன்ப முற்றார்;
வருநபிகள்
உமக்குப்பின் எவரும் இல்லை;
வருந்துன்பம் உமைத்தாக்க வழியும்
இல்லை.
திருத்தகைமை பெற்றவர்நீர்”
என்று கூறிக்
கிறித்தவராம்
வரக்காவும் உரைத்துச் சென்றார். 32
|