|
நபிப்பட்டம்
பெற்றார்
உண்மை
இறைவன் யார்எனவும் உணர்ந்து வணங்கி வாழ்கெனவும்
நன்மை நெறியில் செல்கெனவும் நவில வந்து விண்ணரசன்
தண்மை இறைவன் துணையதனால் தந்த பட்டம் நபிப்பட்டம்
அண்ணல் பெருமான் முகம்மதுகோன் அடைந்த பட்டம்
நபிப்பட்டம் 33
கலிமா மூல மந்திரம்
சிறந்தது
இறைவன் ஒருவன் இருக்கின்றான்; எனினும் உருவம் இல்லாதான்
நிறைவான் தூதர் முகம்மதுவே என்னும் பொருளில் உரைப்பதுதான்
கறையில் லாத இசுலாமின் கலிமா மூல மந்திரமாம்;
நிறைவாய் இசுலாம் இணைந்தவர்கள் நெறியில் நிற்றல்
கடனாகும்; 34
அறியாமை
உள்ளவரின் பல உருவ வழிபாடு
அரபி நாட்டில் உள்ளவர்கள் அறியாமையால் பலதெய்வ
உருவம் வைத்து வழிபட்டார் ஒளியா நெஞ்சர் முகம்மதுவோ
திருவின் தூதர் தாமென்று தெரியச் சொன்னார் நண்பர்க்கும்
அருகில் உள்ள உறவினர்க்கும் அயலார் அறியா
வகையினிலே; 35
இருமைப் பேறு
கிடைக்கும்
உருவம்
அற்ற ஒருவன்தான் உலகில் பிறப்பும் இறப்புமிலான்
அரியோன் அவனை வணங்காமல் ஆகாப் பொருளை வணங்குவதால்
இருமைப் பேறும் இல்லாமல் இழியச் செய்யும் என மறைகள்
உறுதியாகச் சொல்லுவதை ஒத்துச் சொன்னார் முகம்மதுவே! 36
பலர் தீன்
நெறியைப் பின்பற்றினார்
கலிமா
சொல்லச் சொல்கின்ற கனிவு மிகுந்த முகம்மதுவின்
ஒளியாம் உள்ளக் கருத்தினையும் ஓதும் மறையின் உரையினையும்
சலியா தவராய் நோக்கியவர் சரியாய் உள்ளபொருளென்றே
வலியார் நபியார் நெறி சார்ந்தார் வகையாய் வாழும்
உணர்வாலே! 37
|