செபுறயீல்
தோன்றினார்
நின்ற காலை நேரெதிரில் நீல வானில் திங்கள்போல்
மன்றில் காணா மணிஒன்றை மண்மேல் கண்டு பெற்றதுபோல்
சென்ற புகழ்மைச் சீரெல்லாம் சீராய் மீண்டும் வந்தது போல்
அன்றவ் வானில் செபுறயீல் அரிதாய்த் தெரியக்
கண்டாரே! 56
செபுறயீல் வானில்
பறந்தார்
பக்கம் வந்து நின்ற அவர் பரிவாய் “இறைவன் தூதுவரே!
சிக்கல் ஏதும் இலை இல்லை சிந்தை கலங்கல் நன்றில்லை;
மக்கள் போற்றும் முகம்மதுவே! மலர்க” என்று கூறியவர்
மக்கா வானில் பறந்தார்கள் மணியார் உள்ளம்
மகிழ்ந்திடவே! 57
மீண்டும்
வந்தார்
மீண்டும்
மீண்டும் நலம்செய்யும் மேலோர் அறிவின் தொடர்பாளர்
வேண்டும் வி(ஞ்)ஞான சம்பந்த வினையார் நல்ல செயலே போல்
மீண்டும் வந்து செபுறயீல் “மேலோர் நபிகள் நாயகமே!
ஈண்டு வந்த இறுதி நபி, இனியர் நீரே” எனக் கூறி; 58
முசம்மில்
எனும் உரை வழங்கினார்
அருளும்
இறைவன் திருக்குர் ஆன் அதனைக் கையில் முனம்
ஏந்தி
உருகி நின்று சலாமுரைத்தே உரையில் ஏழு பத்தோடு
பொருந்து மூன்றாம் திருவுரையாம் புகழ்சூழ் முசம்மில் எனும் உரையை
மருந்தை நோய்க்குத் தருதல்போல் வானோர்தொழுகை
வழங்கினரே! 59
நீரூற்றுக்
கிளம்பிற்று
மலைமேல்
இருந்த மாண்பினரை வையத் தரைமேல் அழைத்துப்போய்
நிலையாய் நல்ல இடம் தேடி நீள்கால் விரலால்
மண்கிளறத்
தலைவர் முன்னே நீரூற்றுத் தண்ணீர் மேலே தோன்றிட நீர்
நிலையின் அருகில் செபுறயீல் நேரில் அமர நபி
அமர்ந்தார். 60
|