பக்கம் எண் :

128துரை-மாலிறையன்

2. தீன் நிலை கண்ட படலம்

இனி மறைவாக வேண்டாம்

வானோர்கள் போற்றுகிற உயர்நபியார் பட்டமது வழங்கப்பட்டும்
போனஇரட்(டு) இரண்டாண்டில் போனவராம் செபுறயீல் புவிமேல் வந்து
“தேனவரே! இறைவனவன்தெரிவித்த செய்திஒன்று தெரியச் சொல்வேன்
ஏனினிமேல் மறைவாக இயம்புகிறீர்? எல்லாரும் இணங்கச் செய்வீர்”. 1

முத்தத்திர் எனும் ஆயத்து ஓதினார்

எனக்கூறி எனைஈங்கே அவன்தானே அனுப்பியுளான் இதனைக்கூற
வனப்புள்ள திருக்குர்ஆன் எழுபத்து நான்காம்சீர் வழங்கியுள்ள
நினைக்க அரு “முத்தத்திர்” எனும் உரையை மன்னவர்பால் நீட்டித்தந்தே
இணக்கமுரைத் தவராக வானின்மேல் நோக்கியராய் எழிலாய்ப்போனார்; 2

இந்த முறை என்ன முறை?

மறைவாகத் தொழுதவர்கள் எல்லாரும் மறைகேட்டு மகிழ்ந்து சென்று
நிறைவாக எவர்க்குமுனும் நேர்மையுளான் புகழ்கூறி நேர் வணங்கும்
முறைவழியே வணங்கிவரக் கண்டவர்கள் எலாம்கூடி முன்னர்த்தோன்றி
“முறையில்லா இறைவணக்க முறைஎன்ன முறை?” என்றே முறைத்துப்
பார்த்தார். 3

இவரா நபி?

உருவணக்கம் உடையவராம் அரபியர்கள் இது கண்டாங்(கு) ஒன்று கூடித்
“திருவணக்கம் என்கின்றீர் காணுகிற எமக்கெல்லாம் சிரிப்பே தோன்ற
ஒருவணக்கம் தந்தவனை நபிஎன்று போற்றுகிறீர் உண்மை இல்லா
இருள்மகனை ஒளிமகனார் எனவாழ்த்தல் நன்றில்லை” என்று கூறி; 4

இவனால் நமக்குத் தீமையே வரும்

எதிர்த்தவர்கள் எல்லாரும் ஒருமுகமாய் வெறுப்பகத்தால் இணைந்து பேசிப்
“புதிர்போடும் இங்கிவனைப் புரட்சி செயவிட்டு விட்டால் புகழே மாயும்
பதில் கேட்டால் “ஓரிறைவன் உருவமிலான்” எனக்கூறிப் பசப்புகின்றான்
விதிப்படியே போகட்டும் எனவிட்டால் நமக்குத் தீவினையே” என்றார் 5